ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்து கொள்ளுங்கள் ! 4-6 மாத குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சிறந்த திட உணவுகள்!!!

குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்ப்பது என்பதே ஒவ்வொரு பெற்றோருக்கும் வாழ்க்கையில் ஒரு முக்கிய கட்டமாகும். குழந்தை வளர வளர பெற்றோர்களும் உடன் சேர்ந்து வளர்கிறார்கள். குழந்தைகளை வளர்க்கும் ஒவ்வொரு நொடியிலும் அவர்களும் பலவற்றை கற்று பல அனுபவங்களை செய்கின்றனர். சின்ன வயதில் பெற்றோர்கள் சொன்னதற்காக படிக்கும் நாம், ஒரு பெற்றோரான உடன் நம் பிள்ளைச் செல்வங்களை நன்றாக வளர்க்கும் ஆசையில் நாமாக வலிய போய் பலவற்றை கற்று கொள்கிறோம். சரி, உங்கள் குழந்தைகள் நீராகாரத்தில் இருந்து தின்ம வடிவிலான உணவுகளை உண்ணும் நேரத்தை அடையும் போது என்ன கொடுக்க வேண்டும் என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமா?

கண்டிப்பாக பல பெற்றோர்களுக்கும் இந்த நேரத்தில் பல சந்தேகங்கள் ஏற்படும். குழந்தைகள் திட உணவுகளை உண்ண ஆரம்பிப்பது என்பது அவர்கள் ஒரு பெரிய மைல்கல்லை அடைந்து விட்டதை போலாகும். அது அவர்களின் ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு அடித்தளமாக விளங்கும். கண்டிப்பாக இந்த நேரத்தில் பல பெற்றோர்களும் பயந்து போய் தான் இருப்பார்கள். என்ன கொடுக்கலாம், என்ன கொடுக்க கூடாது என்பதில் பெரிய சந்தேகங்களே ஏற்படும். ஒன்றை மறந்து விடாதீர்கள்; திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கும் நேரத்தில் “இது தான் சரி” என நிர்ணயிக்கும் படி எதுவும் இல்லை.

அதனால் இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு என்ன வகையான திட உணவுகளை கொடுக்கலாம் என உங்களுக்காக நாங்கள் ஒரு பட்டியலை தயார் செய்துள்ளோம். அவை பாதுகாப்பானதாக, ஆரோக்கியமானதாக மற்றும் ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவுகளாக திகழும். பல குழந்தை மருத்துவர்கள் குழந்தைகளுக்கு 6 மாதம் முடிந்தவுடன் தான் திட உணவுகள் கொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

தானியங்கள்

அரிசி மற்றும் ஓட்ஸ் தானியங்கள் தான் அலர்ஜி ஏற்படும் இடர்பாடு குறைவாக உள்ள தானியங்களாகும். அதனால் பல குழந்தைகளுக்கு இதிலிருந்து தான் ஆரம்பிக்கப்படுகிறது. ஒரு வேளை தானியங்கள் வேண்டாம் என்றால் அவகேடோ அல்லது வாழைப்பழத்தில் இருந்து தொடங்குங்கள்.

பழங்கள்

8 மாதங்கள் முடிவடைந்தவுடன் பழங்களை அப்படியே கொடுக்கலாம். ஒரு வேளை, மென்மையான பழங்களாக இருந்து, குழந்தைக்கு செரிமான பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருந்தால் 8 மாதத்திற்கு முன்பே கூட இதனை கொடுக்கலாம். வாழைப்பழம் அல்லது அவகேடோ என்றால் எப்போதுமே வேக வைக்க வேண்டாம்.

காய்கறிகள்

குழந்தைக்கு 12 மாதங்கள் முடிந்த பிறகு அல்லது மெல்ல தொடங்கும் போது, காய்கறிகளை எப்போதுமே வேக வைத்தே கொடுங்கள். இதனால் தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்படாது.

புரதம்

சரியாக வேகாத உணவுகளை கொடுக்காதீர்கள் – உதாரணத்திற்கு சரியாக வேகாத கோழி, ஆடு அல்லது மீனை குழந்தைக்கு கொடுக்காதீர்கள்.

பால் பொருட்கள்

குழந்தைக்கு 12 மாதங்கள் முடியும் வரை தாய்ப்பாலுக்கு பதில் வேறு ஏதும் கொடுக்க வேண்டாம். அப்படி செய்தால் உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். 2 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு குறைந்த கொழுப்பு அல்லது ஆடை நீக்கிய பால் பொருட்களை கொடுக்காதீர்கள். முழுமையான பால் தேவையானது.

ஒரு நாளைக்கு எவ்வளவு

மசித்த உணவு அல்லது தானியங்களை ஒரு நாளைக்கு 1 டீஸ்பூன் கொடுத்து ஆரம்பியுங்கள். அந்த தானியங்களுடன் 4-5 டீஸ்பூன் தாய்ப்பாலை சேர்த்திடவும். இந்த 1 டீஸ்பூன் மசித்த உணவை அல்லது தாய்ப்பால் கலக்கப்பட்ட 1 டீஸ்பூன் தானியத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை என உயர்த்திடுங்கள். தானியங்கள் கொடுத்தால் நாளடைவில் அது கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உணவளிக்கும் டிப்ஸ்

முதல் முறையாக நீங்கள் கொடுப்பதை உங்கள் குழந்தை உண்ணவில்லை என்றால், சில நாட்களுக்கு பிறகு மீண்டும் முயற்சிக்கவும்.

இந்த வழிமுறைகளை பயன்படுத்தி, உங்கள் குழந்தைக்கு முதல் வருடத்தில் என்ன கொடுக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நாங்கள் கூறிய அளவு எல்லாம் தோராயமானது தான். அதனால் உங்கள் குழந்தை அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது குறைவாக சாப்பிட்டாலோ அதை எண்ணி கவலை கொள்ளாதீர்கள். குழந்தைக்கு திட உணவுகளை கொடுக்க ஆரம்பிப்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button