சிற்றுண்டி வகைகள்

கொண்டைக்கடலை கட்லெட்

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை – 2 கப்
வெங்காயம் – 1
பூண்டு – 4 பற்கள்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:

• வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கொண்டைக்கடலையை நீரில் 8 மணிநேரம் ஊற வைத்த பின் நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

• பின்பு ஒரு பௌலில் அதைப் போட்டு, அத்துடன் வெங்காயம், பூண்டு, தனியா தூள், சீரகம், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

• அடுத்து அதனை கட்லெட் வடிவில் செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்தால், கொண்டைக்கடலை கட்லெட் ரெடி!!!

 

Related posts

பொன்னாங்கண்ணிக்கீரை – ஓமம் சப்பாத்தி

nathan

கார்லிக் புரோட்டா

nathan

ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ்

nathan

பால் அப்பம்

nathan

சத்தான ஓட்ஸ் கட்லெட் : செய்முறைகளுடன்…!

nathan

சத்தான ஓட்ஸ் – பருப்பு பொங்கல்

nathan

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika

பிட்டு

nathan

தீபாவளி லேகியம் செய்வது எவ்வாறு??

nathan