25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 15174
ஆரோக்கியம் குறிப்புகள்

தொரிந்து கொள்ளுங்கள்! மரணம் நிகழவிருப்பதை வெளிபடுத்தும் 10 அறிகுறிகள்…

நமது உயிரானது வாழ்வில் பல கட்டங்களை கடந்து வருகிறது. அதில் முக்கியாமான இரண்டு, உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கையின் ஆதி அந்தமாக கருதப்படும் பிறப்பும், உயிரும் தான்.

நாம் நமது வாழ்வில் கடந்து வரும் ஒவ்வொரு கட்டத்தையும் மனம் வெவ்வேறு மாதிரியாக எதிரொலிக்கும். ஒரு கட்டத்தில் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் சோகத்தின் உச்சத்தை அடைந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் காரிருள் தனிமையில் சிறைப்பட்டிருப்பீர்கள், ஒரு கட்டத்தில் தாளாத வலியை உணர்ந்திருப்பீர்கள்.

இவற்றில் துன்பம், சோகம், தனிமை, இழப்பு போன்றவற்றின் எல்லையை ஒருவர் அடையும் போது அவருக்கு (உயிர் / மனம்) ஆன்மீக மரணத்தை எதிர்கொள்கிறது என கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக உங்களுள் ஒரு மாற்றம் பிறக்கும், உங்கள் உயிரி / மனம் புத்துயிர் பெரும். நீங்கள் வேறு ஒரு புதிய வாழ்க்கை வாழ துவங்குவீர்கள்.

இதோ! ஒருவர் மனதில் / உயிரில் ஆன்மீக மரணம் நிகழவிருக்கிறது என்பதை வெளிகாட்டும் பத்து அறிகுறிகள்…

தோய்ந்து போனவாறு…

எந்நேரமும் தோய்ந்து போனது போல ஓர் உணர்விருக்கும். வாழ்க்கை மீது ஒரு பெரும் விரக்தி ஏற்படும். உங்களிடம் இருந்த அனைத்தும் இழந்துவிட்டது போன்ற நிலை இருக்கும். படுக்கையில் இருந்து எழுந்திருக்க கூட பிடிக்காது. யாராலும், எதனாலும் உங்களுக்கு உதவ முடியாது என்று கருதுவீர்கள்.

இது உங்கள் வாழ்வில் செயலற்ற பகுதியாக நீங்கள் கருதலாம்.

ஏற்புடையாரற்று!

நீங்கள் உங்கள் பிடித்த இடத்தில், பிடித்த நபர்களுடன் இருந்தாலும், அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ளவில்லையோ என்ற எண்ணம் இருக்கும். யாருமே என்னை காண விரும்பாமல் இருக்கிறார்களே என்று உணர்வீர்கள். நான் எதுக்குமே லாயக்கு இல்லாதவன் ஆகிவிட்டேனா..? என்ற கேள்வி எழும். அந்த இடத்தில், அந்த நபருடன் இருக்க கூடாது, உடனே நகர்ந்து விட வேண்டும் என்று எண்ணுவீர்கள்.

உதவியற்று!

ஏதோ ஒரு வட்டத்திற்குள் சிக்கி கொண்டது போலவும், அதை விட்டு வெளிவர முடியாத நிலையில், உதவியற்று இருப்பது போலவும் உணர்வீர்கள். மீண்டு வரவே முடியாது… இது தான் கடைசி என்ற எண்ணம் நிலவும். உங்கள் வாழ்க்கை உங்களை கட்டுபாட்டில் இல்லை, உங்களிடம் இருக்கும் வலுவின்மை போன்ற உணர்வு உங்களை ஒரு இயலாமை சக்கரத்திற்குள் தள்ளிவிடும்.

அர்த்தமற்று!

யாருமின்றி தனிமையில் தவித்திருப்பது போன்ற நிலையை உணர்வீர்கள். நடுக்கடலில் ஆளில்லா படகில் நீங்கள் மட்டும் தவித்திருப்பது போன்ற சிந்தனை உங்களிடம் தென்படும். உங்கள் வாழ்க்கை ஒரு வெற்றிடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பது போல கருதுவீர்கள். உங்களை நீங்களே ஒவ்வொரு நாளையும் கடத்தி செல்ல… இழுத்துக் கொண்டு போவது போல இருக்கும்.

சந்தேகம்!

உங்களை நீங்களே சந்தேகப்படுவீர்கள். உங்களை கருத்துக்களை நீங்களே நம்பாமல்… இரண்டாம் கருத்துக்கு செல்வீர்கள். உங்கள் உள்ளுணர்வு அப்படி கூறுவதில்லை. ஆனால், நீங்கள் அதை நம்புவீர்கள். உங்கள் வாழ்வின் அந்த கட்டம் உங்களை அப்படி நம்ப வைக்கும்.

இப்படியான பல நிலையை கடந்து உங்கள் உயிர் / மனம் ஆன்மீக மரணத்தில் சங்கமித்து, மீண்டும் மறுபிறவி எடுக்கும்.

குழப்பம்!

உங்களுக்குள் ஒரு குழப்பம் இருக்கும்… நீங்கள், உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் இழுவையாக இருப்பது போலவும், ஏதோ ஒரு விஷயம் தொலைந்து போனது போலவும் சூழலை உணர்வீர்கள். விஷயங்கள், செயல்கள் உங்களை சுற்றி வீழ்ந்துக் கொண்டிருக்கும். எந்த வேளையிலும் கவனம் செலுத்த முடியாது. கவன சிதறல்கள் ஏற்படும்.

ஆகையால், உங்களுக்கு எது தேவையோ அதை மறந்து… வேண்டாததை எல்லாம் இழுத்துப் போட்டு கொண்டு யோசித்துக் கொண்டிருப்பீர்கள். இதுவே உங்களுக்கு பெரிய வேகத்தடையாய் அமையும்.

திறனுக்கு ஏற்ப இல்லை

உங்களை நீங்களே விமர்சனம் செய்துக் கொள்வீர்கள். இது உங்கள மனதை சிதைக்கும். அனைவராலும் விரும்பப்பட்ட நபர், ஏதோ ஒரு தருவாயில் அனைவராலும் வெறுக்கப்படுவது போல எண்ணுவது. இது ஓர் பிரேக்கிங் பாயிண்ட் இதிலிருந்து நீங்கள் வெளிவர வேண்டும். இலையுதிர் காலத்தில் மரத்தில் இருக்கும் இலைகள் முற்றிலும் உதிர்ந்து விடும். ஆனால், அது மீண்டும் அடுத்த காலநிலை மாற்றத்தில் மலர்கிறது அல்லவா…

அதுப்போல தான் இதுவும். ஆன்மீக மரணம் என்பது ஒரு இலையுதிர் காலம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்த நிலைக்கு பிறகு தான் உங்கள் வாழ்வில் ஒரு புத்துயிர்ப்பு உருவாகும். நீங்கள் இன்னமும் புதிதாகவும், வீரியத்துடனும் செயற்பட இது உதவும்.

தீயவை!

அந்த ஆன்மீக மரண தருணத்தை நெருங்கும் போது, நீங்கள் ஒரு தீய சுழலில் சிக்குவீர்கள். அதில் இருந்து மீண்டு வர முடியாது என்று கூட நீங்கள் கருதலாம். அது உங்களை பெரியளவில் தாக்கும். அங்கே நீங்கள் சிக்கிக் கொண்டது போல எண்ணுவீர்கள். அதைவிட்டு வெளிவருவது மிகவும் கடினம் என்று கருதுவீர்கள். ஆனால், இந்த சுழற்சிக்கு ஒரு முடிவு பிறக்கும். அதை தான் ஸ்பிரிச்சுவல் ரீபர்த் என்கிறார்கள். அதாவது ஆன்மீக ரீதியாக நீங்கள் மறுபிறவி எடுத்தல்.

இந்த காலத்தில் உங்கள் கடுங்காலத்தை வெற்றிக் கொண்டு நீங்கள் மீண்டும் நற்பாதைக்கு திரும்புவீர்கள்.

உள்ளூர ஓர் வெற்றிடம்!

இந்த ஆன்மீக மரணத்தின் காலக்கட்டத்தின் கடைநிலையல் நீங்களே உங்களுக்குள் ஒரு வெற்றிடத்தை காண்பீர்கள். நீங்களே உங்களுக்குள் எதையோ இழந்தது போன்று உணர்வீர்கள். உங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று காணாமல் போனது போல ஒரு நிலை இருக்கும். அது உங்களை வலிமையை கடித்து வலியால் துடிக்க செய்யும். அது உங்கள் எண்ணங்களில் தாக்கத்தை உண்டாக்கும்.

உறக்கமற்று!

இப்படியான நிலையானது உங்கள் உறக்கத்தை கெடுக்கும். நிம்மதி எங்கே இருக்கிறது என்று புலம்புவீர்கள்.யாராலும் உங்களை ஆசுவாசப்படுத்த முடியாமல் போகும். யார் கூறும் கருத்துகளையும் கேளாமல், உங்கள் கருத்துக்கள் மட்டுமே உங்களுக்குள் எதிரொலிக்க செய்து அதனுள் ஆழ்ந்து போவீர்கள். இது உங்களை தொய்வடைய செய்யும்.

இது அறிகுறிகள் உங்கள் வாழ்வின் முடிவை கூறுவதல்ல… நீங்கள் மீண்டும் பிறக்க போகிறீர்கள்… இந்த நிலைக்கான மாற்றம் வரும். உங்கள் வாழ்வில் புத்துயிர் பெறுவர்கள், நீங்கள் நிச்சயம் வெற்றிப் பாதைக்கு திரும்புவீர்கள். நீங்கள் இழந்ததாக கருதும் அனைத்தும் உங்கள் அருகிலேயே தான் இருக்கிறது. உங்களை சூழ்ந்திருந்த காரிருள் அவற்றை கண்ணுக்கு புலப்படாமல் மறைத்து வைத்துள்ளது என்பதை நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்.

ஆன்மீக மறுபிறப்பு நிகழும். உங்கள் வாழ்க்கை சுபிட்சம் அடையும்!

Related posts

பெண்களே தொரிந்துகொள்ளுங்கள்….எந்தெந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கணும் தெரியுமா?

nathan

அடிக்கடி டர்..புர்-ன்னு விடுறீங்களா? அதை குறைக்க என்ன செய்யலாம் என்பதையும் காணலாம்

nathan

P அல்லது Rல் உங்கள் பெயர் துவங்குகிறதா?சுவாரஸ்யத் தகவல்…

nathan

நம்முடைய பயணம் ஆறாத வலியையும், வடுவையும் தராது இருக்க கட்டாயம் இத படிங்க!….

sangika

வெந்நீர் குடித்தால் வியாதிகள் ஓடும்!

nathan

அகமும் சார்ந்ததே அழகு!

nathan

குழந்தை பிறந்ததிலிருந்து நிம்மதியா தூங்க முடியலையா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறந்த தொழில் அதிபராக பிரகாசிப்பது எப்படி?

nathan

கட்டாயம் இதை படியுங்கள்..மாதவிலக்கை தள்ளி போடும் இயற்கை வழிகள்

nathan