27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
09 mango chicken
ஆரோக்கிய உணவு

சூப்பரான மாங்காய் சிக்கன் குழம்பு

மாங்காய் சீசன் ஆரம்பித்துவிட்டது. மாங்காய் அனைத்து விலைக் குறைவில் கிடைக்கும். அப்படி விலை குறைவில் கிடைக்கும் மாங்காயை பலர் ஊறுகாய், சாம்பார், குழம்பு என்று செய்து சாப்பிடுவார்கள். அதில் மாங்காயை சாம்பார் செய்து சாப்பிடுவது தான் மிகவும் ருசியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், மாங்காயை சிக்கனுடன் சேர்த்து சமைத்தாலும் சூப்பராக இருக்கும்.

குறிப்பாக அதனை குழம்பு செய்து சாப்பிடுவது அருமையாக இருக்கும். இங்கு மாங்காய் சிக்கன் குழம்பு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ

வெங்காயம் – 2 (அரைத்தது)

மாங்காய் – 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)

தேங்காய் – 1 கப் (துருவியது)

பூண்டு – 2 பற்கள்

இஞ்சி – 1 இன்ச்

பச்சை மிளகாய் – 2

வரமிளகாய் – 2

சோம்பு – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

ஏலக்காய் – 4

பட்டை – 1 இன்ச்

பிரியாணி இலை – 1

தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை நன்கு நீரில் கழுவி, அதில் அரைத்து வைத்துள்ள கலவையைப் போட்டு 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் வெங்காய பேஸ்ட் ஆகியவற்றை வாணலியில் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கடுகு மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு 5-6 நிமிடம் குறைவான தீயில் வதக்கி விட வேண்டும்.

சிக்கனில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அதில் அரைத்த தேங்காய் கலவையை போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மாங்காய் சிக்கன் குழம்பு ரெடி!!!

Related posts

இரத்தசோகை போக்கும் ராஜ்மா

nathan

இந்த ஜூஸ் குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மற்றம் என்ன எனத் தெரியுமா ?

nathan

பட்டாணி… காளான்… கேழ்வரகு… உடலை வலுவாக்கும் புரத உணவுகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடக்கூடாது? மீறி அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

சமையலுக்கு சூரிய காந்தி எண்ணெயை மட்டும் பயன்படுத்தலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இதை மென்று தின்றால் ஆண்மை அதிகரிக்குமாம்?

nathan

எடை குறைப்பு உணவு பட்டியல் – weight loss food chart in tamil

nathan

வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!

nathan

தக்காளி சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா?தெரிஞ்சிக்கங்க…

nathan