26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.80 12
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா வெயிட் போடும் என்று ஒதுக்கிய இந்த சக்தி வாயந்த உணவு பொருள் ஒரே மாசத்துல 20 கிலோ எடையை குறைக்குமாம்!

முட்டை மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த முட்டை உலகின் பல பகுதிகளிலும் சிறந்த காலை உணவாகவும் கருதப்படுகிறது.

முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன் மற்றம் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிரம்பியுள்ளது. ஆனால், முட்டையை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை மற்றும் தொப்பை குறையும்.

பலர் உடல் எடை போடும் என்று ஒதுக்கும் இந்த முட்டையை வைத்து 20 கிலோ வரை குறைக்க முடியும்.

காலை உணவாக முட்டை

முட்டையை காலை உணவாக உண்பது மிகவும் ஆரோக்கியமானது. பெரும்பாலான மக்கள் முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட், முட்டை சாண்ட்விச், முட்டை சாலட், முட்டை புர்ஜி என சமைத்து சாப்பிடுவார்கள்.

முட்டையை சமைக்கும் போது பலர் சமையல் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொள்வார்கள்.

இப்படி இந்த எண்ணெய் அல்லது வெண்ணெயை சேர்க்கும் போது, அதில் கலோரிகள் அதிகரித்து, ஊட்டச்சத்துக்களின் அளவு குறைந்துவிடும்.

வேறு எப்படி சாப்பிடலாம்?

முட்டையை காலை உணவாக உட்கொள்ள நினைத்தால், அந்த முட்டையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சமைத்து உண்ணுங்கள்.

இதனால் சரியான அளவில் நல்ல கொழுப்புக்கள் உடலுக்கு கிடைத்து, உடல் எடையும் குறையும். காலை உணவின் போது ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், உடலின் மெட்டபாலிசமானது 5% அதிகரித்து, தொப்பை விரைவில் குறைவதற்கு பெரிதும் உதவி புரியும்.

மதியம் மற்றும் இரவு உணவாக முட்டை

முட்டையைக் கொண்டு மதியம் மற்றும் இரவு வேளையில் கூட சுவையான சமையலை சமைத்து சாப்பிடலாம்.

அதுவும் மதிய வேளையின் போது, உடைத்துவிட்ட முட்டைக் குழம்பை நவதானிய மாவால் தயாரிக்கப்பட்ட ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லாவிட்டால், உங்களுக்கு பிடித்த சில காய்கறிகளை முட்டை புர்ஜியுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

இவை இரண்டுமே மிகவும் ஆரோக்கியமான மற்றும் எளிதில் தயாரிக்கக்கூடிய ரெசிபிக்களாகும்.

எத்தனை நாட்கள் சாப்பிடலாம்?

இப்படி முட்டை சமையலை வாரத்திற்கு 3-4 நாட்கள் சாப்பிடலாம். இதர நாட்கள் கடலை மாவால் தயாரிக்கப்படும் கலோரி குறைவான சமையலை சாப்பிடலாம்.

ஏனெனில் கடலை மாவு உடல் எடையைக் குறைக்க உதவும் மிகச் சிறப்பான பொருளாக கருதப்படுகிறது.

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

ஊட்டச்சத்து நிபுணர்களின் படி, ஒரு நாளைக்கு 3 முட்டை வரை சாப்பிடலாம்.

குளிர்காலத்தில் வேண்டுமானால் 4-5 முட்டை வரை சாப்பிடலாம். ஆனால் இக்காலத்தில் அதிகப்படியான கலோரிகளை எரிப்பதற்கு உடற்பயிற்சிகளை அவசியம் செய்ய வேண்டும்.

இதர நாட்கள் சமையலின் போது தேங்காய் எண்ணெய் சேர்த்து உணவை சமைத்து சாப்பிடலாம். முக்கியமாக வெறும் முட்டையை மட்டும் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்துவிடாது.

ஆகவே முட்டை சாப்பிடும் நாட்களிலும், பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களையும் சாப்பிட வேண்டும்.

குறிப்பு
முட்டையினால் சிறப்பான பலனைப் பெற வேண்டுமானால், அதை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம். எனவே சரியான நேரத்தில் சரியான முறையில் முட்டையை சாப்பிட்டு, அதன் முழு சத்துக்களையும் பெறுங்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பெண்களின் மாதவிடாய் வலியை குணப்படுத்தும் வாழைப்பூ..!!

nathan

உடல் நலனை ஊக்குவிக்கும், நல்ல கொழுப்புச் சத்துள்ள உணவுகள்!!!

nathan

நம் ஆரோக்கியத்தை காக்கும் மண் பாண்ட சமையல்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டிய உணவுகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! காலையில் 12 கறிவேப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஸ்டார் ஹோட்டல் முதல் தெருமுனை வரை கிடைக்கும் ஃப்ரைடு ரைஸ்… சாப்பிடலாமா… கூடாதா?!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருவளத்தை மேம்படுத்தும் அற்புத ஜூஸ்!

nathan

பெண்களுக்கு மிகவும் உகந்த கருப்பு உளுந்து களி

nathan

வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்ப்பதால் பெறும் நன்மைகள்!!!

nathan