28.5 C
Chennai
Sunday, Nov 24, 2024
இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன்?
ஆரோக்கியம் குறிப்புகள்

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன்?

இஞ்சி உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப்பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இஞ்சி மருத்துவ பலன்கள் பற்றி கீழே பார்ப்போம்.

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத்தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.11998962 708003969330093 9064745852899154324 n

Related posts

கரு-த்தரிப்பை இயற்கை முறையில் தவிர்ப்பது எப்படி? தெரிந்துகொள்வோமா?

nathan

ஆய்வில் தகவல்! வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் 50% இரத்த சர்க்கரை அளவு குறையுமாம்..

nathan

பெண்களுக்கு பலன் அளிக்கும் கேரட்

nathan

உடல் எடை மற்றும் தாய்ப்பால் இரண்டிலும் ஏன் பெண்கள் கவனம் தர வேண்டும்?

nathan

யோகாவில் அசத்தி வரும் ஷில்பா ஷெட்டி இவருக்கு வயது 44 ஆகும்

nathan

உங்களுக்கு பக்கத்துலயே வர முடியாத அளவு தூர்நாற்றமா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா நிலவேம்பு கஷாயத்தின் மகத்துவங்கள் என்ன தெரியுமா?

nathan

உங்கள் கூந்தல் ஆரோக்கியமானதா என்பதை அறிந்து கொள்ள…

nathan

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் குளிர்சாதன வசதி

nathan