கிழங்கு வகையை சேர்ந்த முள்ளங்கி வெள்ளை, சிவப்பு ஆகிய இரு நிறங்களில் உள்ளன. இதில் மருத்துவ குணங்கள்
நிறைந்திருப்பதால் பல நோய்களுக்கு மருந்தாகிறது.
முள்ளங்கியில் ஒருவித காரத்தன்மையும், நெடியும் இருக்கும். இது கந்தக சத்தால் உண்டாகிறது. முள்ளங்கியில் இருக்கும் பல
வகையான கந்தக மூலக்கூறுகளே அதன் மருத்துவதன்மைக்கு காரணமாகின்றன.
முள்ளங்கி வெப்பத்தன்மையை உள்ளடக்கியது. அதே சமயம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும்
அளிக்கின்றது.
ஆஸ்துமா, மூச்சிரைப்பு, சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு கபம் தோன்றும். அதனை முள்ளங்கி வெளியேற்றும்.
தொண்டைக்கட்டையும், மூக்கு- தொண்டை பகுதியில் ஏற்படும் தொற்று நோய்களையும் முள்ளங்கி குணப்படுத்தும்.
முள்ளங்கி சாறு 30 மில்லியுடன் சிறிது நீர் கலந்து, அரை சிட்டிகை மிளகு தூளும் சேர்த்து பருகினால் கபம் வெளியேறும்.
தொண்டை
அழற்சியும் நீங்கும்.
முள்ளங்கி கல்லீரலுக்கு சிறந்த நண்பன். இதில் உள்ள கந்தக சத்துக்கள் பித்தநீரை சீராக சுரக்கச் செய்யும். இதனால் கொழுப்பு மற்றும்
மாவு சத்துக்கள் நன்றாக ஜீரணமாகும். பித்தப்பையில் கற்களும் தோன்றாது. இரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கப்படும்.
ரத்தத்தில் பிராணவாயுவும் அதிகமாகும்.
வயிற்று உப்புசம் ஏற்படும்போது பார்லி கஞ்சியுடன் 30 மிலி முள்ளங்கி சாறு ¼ தேக்கரண்டி இந்துப்பு கலந்து பருகினால் உப்புசம் நீங்கும்.
ஜீரண தொந்தரவுகள் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் முள்ளங்கியை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
முள்ளங்கியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்க உதவுகின்றது. குடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மூலம்,
பவுத்திரம் போன்ற நோய்களுக்கும் முள்ளங்கி மருந்தாகும்.
இதில் வைட்டமின்- ஈ சத்து அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சிறந்த கிருமி நாசினியாகவும், உடல் வலிகளை நீக்கும்
சக்தி
கொண்டதாகவும் முள்ளங்கி இருக்கிறது. புற்றுநோய் உள்ளவர்கள் முள்ளங்கியை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
முள்ளங்கி, சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்க உதவுகிறது.
தினமும் 50 மிலி முள்ளங்கி சாற்றை சிறிது நீர் கலந்து
சாப்பிட்டுவந்தால் சிறு நீரக கற்கள் வெளியேறும். சிறுநீரக தொற்றும் நீங்கும். இதில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரை அதிகப்படுத்தி
வெளியேற்றும். அதனால் உடலில் உள்ள கழிவுகள் நீங்கும். வீக்கம், உடல் வலியும் போகும்.
முள்ளங்கியில் போலிக் அசிட் உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கால் வீக்கம் மற்றும்
கர்ப்ப காலத்தில் உண்டாகும் ரத்த அழுத்தம் நீங்கும்.
முள்ளங்கி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகின்றது. அதனால் சர்க்கரை நோய் இருப்பவர்கள் முள்ளங்கியை சாலட் செய்து
சாப்பிடலாம். உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. இது சருமத்தை பொலிவாக்கி, இளமையை பாதுகாக்கவும் செய்யும்.