கேரட் (துருவியது) – பாதி,
செலரி (நறுக்கியது) – பாதி,
பொடித்த பச்சை மிளகு – 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
காய்கறி வேக வைத்த தண்ணீர் – 1 கப்,
தக்காளி பியூரி (ரெடிமேடாக கிடைக்கும்) – 1 கப்,
சர்க்கரை – முக்கால் டீஸ்பூன்,
மிளகுத்தூள் – சிறிது,
கார்ன்ஃப்ளார் – ஒன்றரை டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து கேரட், செலரி, பச்சை மிளகு, வெங்காயம் ஆகியவற்றை மிருதுவாகும்வரை வதக்கவும். 2 டேபிள்ஸ்பூன் அளவு காய்கறி வேக வைத்த தண்ணீரைத் தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ள காய்கறித் தண்ணீரில் தக்காளி பியூரி, சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். தீயைக் குறைத்து, 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். தனியே எடுத்து வைத்துள்ள காய்கறித் தண்ணீரில் கார்ன் ஃப்ளாரை மிருதுவாகக் கரைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக அதை சூப்பில் சேர்த்துக் கொதிக்கவிடவும். 2 நிமிடங்களுக்கு நன்கு கலந்து விட்டு, சூப் கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.