25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
18 1442556971 6 clove
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க பல் மஞ்சளா இருக்கா? இதோ அதைப் போக்க உதவும் சில எளிய வழிகள்!

பலருக்கு பற்கள் புகைப்பிடிப்பது மற்றும் ஆல்கஹால், காபி, டீ, சோடா பானங்கள் போன்றவற்றைக் குடித்து மஞ்சள் நிறத்தில் இருக்கும். இப்படி மஞ்சளாக இருக்கும் பற்களை வெண்மையாக்குவதற்கு கடைகளில் விற்கப்படும் கண்ட டூத்பேஸ்ட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதுவும் ஒரு நாளைக்கு பலமுறை அந்த டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்குவோம். இருப்பினும் அந்த டூத் பேஸ்ட்டுகளில் உள்ள கெமிக்கல்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கு பதிலாக, எனாமலை அரித்துவிடும்.

எனவே பலர் பல் மருத்துவரை சந்தித்து பற்களை ப்ளீச்சிங்க், ஒயிட்னிங் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். இப்படி அடிக்கடி செய்வதால், பற்கள் சென்சிடிவ்வாகி கூச ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, அது தற்காலிகமே. ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், பலன் நிரந்தரம் மட்டுமின்றி, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் விரைவில் அகலும்.

சரி, இப்போது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க உதவும் சில எளிய வழிகள் குறித்து காண்போம்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் உள்ள அமிலம், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கும். அதற்கு ஸ்ட்ராபெர்ரி பழத்தை அரைத்து, அதில் 1 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும். இப்படி தினமும் இரு வேளை செய்து வந்தால், நல்ல பலனை உடனடியாகக் காணலாம்.

எலுமிச்சை


எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், அவற்றைக் கொண்டு பற்களைப் பராமரித்தால், பற்களில் உள்ள கறைகள் அகலும். அதற்கு எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து கலந்து, பற்களை தேய்த்து குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல் கூட பற்களில் உள்ள நீங்கா மஞ்சள் கறைகளை நீக்க உதவும். அதற்கு ஆரஞ்சு பொடியை உலர்த்தி, பொடி செய்து, தினமும் அதனைக் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அதனைக் கொண்டு வாரம் ஒருமுறை பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். குறிப்பாக இதனைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்க வேண்டாம். ஏனெனில் இது பற்களின் எனாமலை அரித்துவிடும்.

துளசி

துளசி இலைகள் கூட மஞ்சள் பற்களுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசி இலைகளை பொடி செய்து தினமும் பற்களை துலக்கலாம் அல்லது தினமும் சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

கிராம்பு

18 1442556971 6 clove
பல நூற்றாண்டுகளாக பல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கிராம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய கிராம்பு பல் மற்றும் ஈறு பிரச்சனைகளைப் போக்குவதோடு, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கவும் உதவும். அதற்கு கிராம்பை பொடி செய்து தினமும் அதனைக் கொண்டு பற்களை துலக்க வேண்டும்.

Related posts

நீங்கள் வீட்ல ரெடிமேட் மாவு வாங்கி இட்லி, தோசை பண்றீங்களா? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

ஹெல்த் ஸ்பெஷல் செம்பருத்தி பூவை தேநீர் செய்து குடிப்பதால் உண்டாகும் ஆரோக்கிய பலன்கள்..!!

nathan

அதிர்ச்சி ரிப்போர்ட்.!கருச்சிதைற்கு காற்றுமாசுபாடுதான் காரணம்?

nathan

இடுப்பு கொழுப்பை மட்டும் மின்னல் வேகத்தில் கரைக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பிரசவத்திற்கு பிறகு தளர்வான தொங்கும் சதைகளா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இந்த 5 ராசிக்காரங்க விஷத்தை விட ஆபத்தானவங்க…

nathan

முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம்ன்னு உங்களுக்கு தெரியுமா???

nathan

இந்த 4 ராசிக்காரங்க கூட இருந்தா நேரம் போறதே தெரியாதாம்..

nathan

குடிக்கும் தண்ணீரைப் பற்றிய 6 மூடநம்பிக்கைகள்!!!

nathan