25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1branflakes
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

தற்போது மக்கள் சுவையான உணவுகளை சாப்பிடுகிறேன் என்ற பெயரில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் வளமாக நிறைந்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இப்படி கொலட்ஸ்ரால் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்களுக்கு உள்ளாகக்கூடும் என்பது தெரியுமா? அதிலும் கொலட்ஸ்ரால் உடலில் அதிகம் இருந்தால், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் உடலில் சீக்கிரம் வந்துவிடும்.

பொதுவாக கொலட்ஸ்ராலானது செல் மென்படலங்களின் சீரான செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாதது. ஆனால் சாதாரணமாக நமது உடலிலேயே செல் மென்படலங்களின் செயல்பாடுகளுக்கு வேண்டிய கொலஸ்ட்ராலானது உற்பத்தி செய்யப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும் என்பதில்லை.

அதிலும் வயதாக ஆக, உண்ணும் உணவுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை விரைவில் சந்தித்து, சீக்கிரம் மரணத்தை தழுவ வேண்டியிருக்கும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ 30 வயதிற்கு மேல் கொலஸ்ட்ரால் குறைவாக நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வர வேண்டும்.

இங்கு கொலஸ்ட்ரால் குறைவாக உள்ள சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனை உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

அரிசி தவிடு மற்றும் கைக்குத்தல் அரிசி

இந்த இரண்டிலும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால், இவற்றை உட்கொண்டு வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதைத் தடுக்கலாம்.

ஆளிவிதை

ஆளிவிதை உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதனை வைரஸ் காய்ச்சலின் போது சிறிது வாயில் போட்டு மென்றால், வைரஸ் காய்ச்சலானது விரைவில் குணமாகும்.

பூண்டு

மிகவும் பிரபலமான உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்கும் பூண்டில் கூட கொலஸ்ட்ரால் இல்லை. அதுமட்டுமின்றி, இவை உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைக்கவும் செய்யும்.

பாதாம்

மற்ற நட்ஸ்களை விட, பாதாமில் மட்டுமே கொலஸ்ட்ரால் குறைவு. மேலும் இதனை எந்த நேரம் வேண்டுமானாலும் பசியெடுக்கும் போது ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.

தக்காளி

தக்காளில் கொலஸ்ட்ராலைக் கரைக்கும் லைகோபைன் என்னும் பொருள் அதிகம் இருக்கிறது. அத்துடன் தக்காளியிலும் புரோட்டீன் நிறைந்துள்ளது.

பார்லி

ஆம், பார்லி கூட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். எனவே பார்லி மாவைக் கொண்டு சப்பாத்தி, பூரி போன்று செய்து சாப்பிட்டால், மிகவும் நல்லது.

சாக்லெட்

சாக்லெட்டுகளில் டார்க் சாக்லெட்டில் தான் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. மேலும் டார்க் சாக்லெட் இதயத்திற்கு நல்லது மட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

க்ரீன் டீ

தினமும் இரண்டு முறை க்ரீன் டீ குடித்து வந்தால், கொலஸ்ட்ராலானது குறையும். அதிலும் இதில் சர்க்கரை சேர்க்காமல் தேன் சேர்த்து குடிப்பது இன்னும் சிறந்தது.

ஓட்ஸ்

கொலஸ்ட்ரால் குறைவாக உள்ள இந்திய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஓட்ஸ். தற்போது பல மில்லியன் மக்கள் தங்களது காலை உணவாக ஓட்ஸை தான் எடுத்து வருகிறார்கள். மேலும் ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதுடன், உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால், அதனை குறைக்கும்.

சோயா

சோயாவிலும் கொலஸ்ட்ரால் குறைவாகத் தான் உள்ளது. அத்துடன் அதில் புரோட்டீனும் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இது முட்டையின் வெள்ளைக்கருவிற்கு சிறந்த மாற்றாக இருக்கும்.

கோதுமை

கோதுமையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதுடன், கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை. எனவே இதனை எப்போது வேண்டுமானாலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஸ்மார்ட்டான உணவுகள்

அதென்ன ஸ்மார்ட் உணவுகள் என்று கேட்கிறீர்களா? அது வேறொன்றும் இல்லை, சிட்ரஸ் பழங்கள், ப்ளூபெர்ரி, பச்சை இலைக் காய்கறிகள், பசலைக்கீரை, ஆலிவ் ஆயில் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் நிறைந்துள்ளது.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related posts

சூப்பர் டிப்ஸ்! குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடால் போதும்!

nathan

வித்தியாசமான சுவையுடன் பிஸ்கட் மில்க் ஷேக்

nathan

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்!

nathan

உடலுக்கு நிலக்கடலை பாலினால் ஏற்படும் நன்மைகள்..

nathan

வல்லாரையின் மருத்துவப் பயன்கள், கண்டிப்பாக வாசியுங்க….

nathan

சூப்பர் டிப்ஸ்! சமையலறை பொருட்களை பாதுகாக்கும் சில பயனுள்ள குறிப்புகள்….!

nathan

உங்க இதயத்தை பாதுகாக்கும் காலிப்ளவர்

nathan

தெரிஞ்சிக்கங்க… நட்சத்திரப் பழமும், நன்மைகளும்…

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு பழம் சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்!

nathan