சிலருக்கு திடீரென ஏற்படும் விக்கல் என்ன வைத்தியம் செய்தாலும் நிற்காது. மூச்சை அழுத்திப் பிடிப்பார்கள். தண்ணீர் குடிப்பார்கள். ம்ஹூம். விக்கல் தீராது. மீண்டும் மீண்டும் வந்து உடல் அசந்துவிடும். அப்படிப்பட்ட தீராத விக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் எளிய நிவாரணம் உள்ளது.
சீரகம், திப்பிலி தலா 20 கிராம் எடுத்து அதை நன்றாக அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
தொடர்ச்சியாக விக்கல் வரும்போது சுக்கை பொடி செய்து தேனில் குழைத்து நாக்கில் தடவினால் விக்கலுக்குத் தீர்வு கிடைக்கும்.
விக்கலால் தொடர்ச்சியாக அவதிப்படுபவர்கள் கீழாநெல்லிச் செடியின் வேரை எடுத்து வாயில் குதப்பிக் கொண்டால் சிறிதுநேரத்திலேயே விக்கல் நின்றுபோகும்.
அரச மரப்பட்டையைச் சுட்டு அதன் சாம்பலைத் தண்ணீரில் கரைத்து தெளிந்த நீரைக் குடித்தல் விக்கல் பிரச்னை நீங்கும்.
கடுக்காய்த் தோலைப் பொடி செய்து விக்கல் எடுக்கும்போது கால் ஸ்பூன் அளவு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.
காய்ந்த மல்லி, சோம்பு இரண்டையும் நன்றாக வறுத்து சுடுநீரில் கால் ஸ்பூன் அளவுக்கு போட்டுக் குடித்தால் உடனே விக்கல் ஓடிவிடும்.