hyderabad chicken fry
ஆரோக்கிய உணவு

ஹைதராபாத் கோழி வறுவல் செய்முறை!

தேவையான பொருட்கள்

கோழிக்கறி – ஒரு கிலோ
பெரிய வெங்காயம் – 2
தேங்காய் – ஒரு மூடி
உலர்ந்த மிளகாய் – 10
பட்டை – சிறு துண்டு
கசகசா – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் – 2
நெய் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
தக்காளி – அரைக் கிலோ
பூண்டு – 5 பல்
சர்க்கரை – 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – அரைத் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கோழிக்கறியை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும், ஒரு மூடித் தேங்காயையும் எரியும் நெருப்பின் மீது வாட்டவும்.
வெங்காயத்தின் தோலை நீக்கவும். தேங்காய் மூடியில் இருந்து தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். கருகிய பாகத்தை நீக்கி விடவும்.

வாணலியை காய வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விடவும். நெய் சூடேறியதும் பட்டை, சோம்பு, மிளகாய், கறிவேப்பிலை, ஏலக்காய், கசகசா, தேங்காய்த் துருவல், வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு வதக்கி எடுத்து அரைத்துக் கொள்ளவும்.

அரைக் கிலோ தக்காளியைத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை உரித்துக் கொள்ளவும்.
அடிக் கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தக்காளியையும், பூண்டையும் மிதமான தீயில் வதக்கவும். சிறிது நேரத்திற்கு பிறகு தீயைக் கூட்டி நன்கு கொதிக்க விடவும்.

குழம்பு பதமாய் வந்தவுடன் இறக்கி ஆறவிட்டு, பின்பு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு இதனுடன் சர்க்கரை, ஒரு தேக்கரண்டி உப்பு, அரைத் தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு கெட்டியானவுடன் இறக்கி தனியே வைத்துக் கொள்ளவும். இதனை கடைசியில் பயன்படுத்த வேண்டும்.

ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

சிவக்க வதக்கியப் பின் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பும் சேர்த்து வேகவிடவும்.

கோழிக்கறி வெந்ததும், தயாரித்து வைத்துள்ள தக்காளிக் கலவையை சேர்த்துக் கிளறி இறக்கி விடவும். கொத்தமல்லித் தழையைத் தூவவும்.hyderabad chicken fry

Related posts

இரத்தம் அதிகரிக்க வேண்டுமா? பீட்ரூட் சாப்பிடுங்கள்

nathan

இதயம்… செரிமானம்… ரத்த சுத்திகரிப்பு… பெரும் பயன்கள் தரும் பெருஞ்சீரக டீ

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த நேரத்தில் கிரீன் டீ குடிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்தும்!

nathan

சத்து நிறைந்த சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம்

nathan

செம்பருத்தி பூ இருக்கா! மருத்துவரே தேவை இல்லை…. பானம் செய்து குடிங்க போதும்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

அமிலத்தை நீக்கும் 7 ஆல்கலைன் உணவுகள்!

nathan

உலர் ஆப்ரிகாட் பழங்களில் உள்ள சத்துக்கள்

nathan

மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும் உணவுகள்!!!

nathan