24.3 C
Chennai
Thursday, Dec 19, 2024
sl4163
சிற்றுண்டி வகைகள்

ஸ்டஃப்டு வெஜிடபிள் இட்லி

என்னென்ன தேவை?

பெரிய உருளைக்கிழங்கு – 1,
எண்ணெய் – 1 டீஸ்பூன், (வேக வைத்து தோல் நீக்கி பிசைந்தது)
கடுகு – 1 டீஸ்பூன்,
உடைத்த உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
வெங்காயம் – 1,
பெரிய தக்காளி – 2,
குடைமிளகாய் – 1 (நறுக்கியது),
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
தண்ணீர் – 3/4 கப்,
நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன்,
உப்பு, இட்லி மாவு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து தாளிக்கவும். பிறகு, வெங்காயம் சேர்த்து வதங்கியதும், தக்காளி மற்றும் குடைமிளகாய், மல்லி இலை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும். அதன்பின்னர், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும். நல்ல மசாலா வாசனை வந்தவுடன் இறக்கவும். இட்லி பானையை சூடாக்கி இட்லி தட்டில் பாதி அளவு மாவை விட்டு நடுவில் மசாலா வைத்து மேலே இட்லி மாவை விட்டு வேக விடவும். இட்லி வெந்தவுடன் பரிமாறவும்.

sl4163

Related posts

காளான் கொழுக்கட்டை

nathan

மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்

nathan

கம்பு – கொள்ளு அடை செய்வது எப்படி

nathan

மைசூர் பாக்

nathan

பாசிப்பருப்பு கடையல்

nathan

வெஜ் சாப்சி

nathan

சூப்பரான மினி சாம்பார் இட்லி செய்வது எப்படி

nathan

செட் தோசை

nathan

பேபி கார்ன் புலாவ்

nathan