24 C
Chennai
Thursday, Dec 19, 2024
1
ஆரோக்கியம் குறிப்புகள்

வெஜ் வான்டன் சூப்

தேவையானவை: மைதா – 30 கிராம், கேரட் – 20 கிராம், பீன்ஸ் – 10 கிராம், வெங்காயம் – 5 கிராம், செலரி (கொத்தமல்லி போன்றது – டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 2 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா 5 கிராம், பச்சை மிளகாய் – ஒன்று, சோயா சாஸ் – 2 மில்லி, அஜினோமோட்டோ (விரும்பினால்) – சிறிதளவு, ஸ்பிரிங் ஆனியன் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய், பாதி அளவு கேரட், பூண்டு மற்றும் சோயா சாஸ், செலரி, சிறிதளவு உப்பு ஆகியவற்றை எண்ணெயில் நன்கு வதக்கிக்கொள்ளவும். மைதாவை சமோசா மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். வதக்கியவற்றை மைதாவினுள் வைத்து சமோசா செய்வது போல் செய்து, இட்லி பானையில் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அது கிரீடம் போன்ற வடிவில் இருக்க வேண்டும். இப்போது வான்டன் தயார்.

கடாயில் எண்ணெய் ஊற்றி மீதமுள்ள பூண்டு, கேரட், சேர்த்து வதங்கியதும் தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள வான்டனை போட்டு, தேவையான உப்பு சேர்த்து, (விரும்பினால்) அஜினோமோட்டோ சேர்த்து இறக்கி, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
1

Related posts

இந்த கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டால் கிடைக்கும் தொடர்ச்சியான நன்மைகள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஒரே இரவில் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள்

nathan

க‌ண்களு‌க்கே‌ற்ற கு‌ளி‌ர்‌ச்‌சியான க‌ண்ணாடிக‌ள்

nathan

ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்!!

nathan

இந்த பொருட்களில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் உங்களுக்கு எப்பவுமே அதிர்ஷ்டம் வராதாம்! தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களுக்கு கணக்கற்ற நன்மைகளை அளிக்கும் ‘கடலை எண்ணெய்’

nathan

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா அதிர்வு அலை சிகிச்சை மூலம் நன்மைகள் என்ன ??

nathan

பெற்றோர், குழந்தைகளிடையே தகவல் தொடர்பு அவசியம் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan