26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
ஆரோக்கியம்எடை குறைய

வெங்காயம் பயன்படுத்தி எடை இழப்பதற்கு 2 பயனுள்ள வழிகள்

onionவெங்காயம் உலகில் மிகவும் பரவலாக மற்றும் பொதுவாக பயிரிடப்படும் காய்கறிகளில் ஒன்றாகும். நீங்கள் அதை சமைத்தும் சாப்பிடலாம் அல்லது அப்படியேவும் சாப்பிட முடியும். நீங்கள் ஊறுகாய் மற்றும் சட்னி செய்யதும் இதை பயன்படுத்த முடியும். இது பல்வேறு உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதை சேர்ப்பதால் உணவின் சுவையையும் அதிகரிக்கிறது. இது ஒரு வகையான‌ காய்கறி, இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன‌. இதன் சுகாதார நன்மையை பார்க்கும் போது நமக்கு இது நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது, புற்றுநோய்க்கு எதிரான ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகளை, கொண்டிருக்கிறது. .

எடை இழப்பதற்கு நீங்கள் தாராளமாக வெங்காயம் பயன்படுத்தலாம்: .
த‌ற்போது, உலகின் ஒரு பெரும் பகுதி உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் எடை ஜீன் காரணங்களினாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையினாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இல்லாமை, அதிகப்படியான துரித வகை உணவுகளினாலும் உடல் பருமன் உருவாகிறது. இதனால் நம் உடலாந்து அதிக‌ பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உடல் எடைக்கு வழிவகுக்க இவைகள் காரணங்களாக விளங்குகின்றன‌. .

வெங்காயத்தை பயன்படுத்தி நம் உடலில் இருக்கும் கூடுதல் எடை மற்றும் கூடுதல் கொழுப்பை குறைப்பதற்கு இது ஒரு இயற்கை வழியாகும். இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்ற விகிதத்தால் உங்கள் உணவு மற்றும் செல்களின் உறிஞ்சுதலாலும் செரிமான விகிதம் குறைகிறது. இந்த விகிதம் சில பிரச்சினைகளின் காரணமாக, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. வெங்காயத்தால் உங்கள் வளர்சிதை மாற்றத்தை வேகமாக செயல்படுத்துவதோடு இயல்பாகவே உங்கள் எடையை குறைக்க பல்வேறு அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் கனிமங்களை இது கொண்டிருக்கின்றன. முன்னர் குறிப்பிட்டபடி அதிகப்படியான உடல் எடையை குறைக்க‌ சரியான ஆயுதங்களில் இது ஒன்று, இது ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பண்புகளைக் கொன்டது.

வெங்காயம் சாப்பிடுவதால் கூடுதலான எடை இழக்க சிறந்த வழிகள் சில கீழே தரப்பட்டுள்ளன:
1. வெங்காயச் சாறு: .
நீங்கள் எடை குறைக்க, வெங்காயச் சாற்றை ஒரு டம்ளர் சாப்பிடவும், இதில் அனைத்து நல்ல பண்புகளும் அடங்கியுள்ளன. எனெவே அதிக‌ எடை இழப்புக்கு வெங்காயச் சாறு ஒரு நல்ல வழிமுறையாக உள்ளது.
வெங்காயச் சாறு செய்யும் செய்முறை: .
வெங்காயச் சாறு செய்ய‌, நீங்கள் பின்வருபவற்றை பின்பற்ற வேண்டும்: .
1. புதிய வெங்காயம் 1 தோல் நீக்கப்பட்டது. .
2. நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு இதை 10 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். .
3. ஒரு மிக்சியில் 2 கப் தண்ணீர் சேர்த்து அதில் வேகவைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு அரைக்கவும்.
4. இப்போது, நீங்கள் இதை வடிகட்டியோ அல்லது அப்படியோ குடிக்கலாம், ஒரு இயற்கையான‌ வழியில் எடை இழக்க‌ உதவும் வெங்காயச் சாறு, தயார். .
2. வெங்காய சூப்:.
எடை இழப்பதற்கு வெங்காய சூப் மிகவும் ஒரு பயனுள்ளதாக உள்ளது, மேலும், நீங்கள் விரைவில் உங்கள் எடையை இழக்க விரும்பினால் இது மிகச்சிறந்த வழியாகும். வெங்காய சூப் எனபது ஒரு வழக்கமான உணவாகும் நீங்கள் மிக குறுகிய காலத்தில் உங்களின் கூடுதல் பவுண்டுகளை இழக்க செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு.
வெங்காய சூப் தயார் செய்யும் முறை: .
வெங்காயம் சூப் தயார் செய்யத் தேவையானவை: .
1. 4 அல்லது 5 பெரிய வெங்காயம், 2 அல்லது 3 கரண்டி மிளகுத்தூள், 4 பெரிய பழுத்த தக்காளி மற்றும் முட்டைக்கோஸ் (நடுத்தர அளவு). .
2. அனைத்து பொருட்களையும் கழுவி அதை சிறு துண்டுகளாக வெட்டவும். .
3. ஒரு கடாயில் அனைத்து காய்கறிகளையும் கொதிக்கவிட்டு நன்றாக வேக வைக்க‌ வேண்டும், இது ஒரு சூப் போன்ற பதத்தில் இருக்கும் அளவிற்கு வேக வைக்க வேண்டும். .
3. சுவைக்கேற்ப‌ உப்பு சேர்க்கவும். .
4. இந்த சூப் தினமும் சாப்பிடும் வழக்கமான உணவாகும், இது உங்களுக்கு எந்தவித‌ பக்க விளைவுமின்றி மற்றும் எந்தவித பலவீனமும் இல்லாமல் ஒரிரு நாட்களில் அதிகப்படியான கொழுப்பை இழக்க உதவி செய்யும். இது உங்களுக்கு ஆச்சரியமான முடிவுகளை கொடுத்து உங்கள் உடலின் அனைத்து அதிகப்படியான கொழுப்பையும் எரிக்கிறது. .
வெங்காயம் பண்டைய காலத்தில் இருந்தே ஒரு காய்கறியாக‌ பயன்படுத்தப்படுகிறது. பண்டைய காலங்களில், எகிப்தியர்கள் பல்வேறு நோய்களை குணப்படுத்த இதை பயன்ப்டுத்துகின்றனர். இவர்களுக்கு இந்த சிறிய காய்கறியின் திறனை பற்றி நன்றாக‌ தெரியும்! நீங்கள் எடை இழக்க முயற்சி செய்ய இந்த‌ அனைத்து சத்துக்களையும் கொண்ட‌, வெங்காயமான‌து உங்களது சிறந்த நண்பராக இருந்து உதவி செய்கிறது. இந்த பொதுவான காய்கறி உங்களுக்கு எந்தவிதமான‌ பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிற‌து. .
எனவே, நீங்கள் ஒரு வெங்காயத்தை அடுத்த முறை வெட்டும் போது, நீங்கள் சிந்தும் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராகத்தான் இருக்கும் கண்டிப்பாக! .
உங்களுக்கு எடை இழப்பிற்கு வெங்காயத்தை பயன்படுத்தி அதனால் பெற்ற பயனுள்ள வழிமுறைகளை பற்றி தெரியுமா? உங்களுக்கு வெங்காயத்தை வேறு எந்த முறையில் உட்கொள்வது என்று வேறு வழிகளாவது தெரியுமா? கீழே கருத்து பகுதியில் உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Related posts

உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ள 5 வழிகள்:

nathan

சிக்கென்ற இடை தரும் சில யோகாசனங்கள்(beauty tips in tamil)

nathan

மூட்டை பூச்சிகளை விரட்டுவதில் இது மிகவும் பயனுள்ளது!…

sangika

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்!

nathan

இயற்கை பொருட்களை வைத்து அழகை பேண இதை செய்யுங்கள்….

sangika

உடல் பருமனைக் குறைக்கும் சோளம்!

nathan

* எடை கூட காரணங்கள்: *

nathan

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

nathan

இவை எத்தைனை நன்மைகளை தருகின்றன தெரியுமா?….

sangika