28.5 C
Chennai
Sunday, Dec 15, 2024
08 1433769145 5 dog
மருத்துவ குறிப்பு

வீட்டில் செல்லப் பிராணியை வளர்க்கிறீர்களா? அப்ப வீட்டை சுத்தமா வெச்சுக்க சில டிப்ஸ்…

வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பதை விட சுவாரசியம் ஏதும் இருக்க முடியுமா? உங்கள் மீது அவைகள் கொள்ளும் அக்கறையை போல் வேறு யாராலும் காட்ட முடியாது. "நாய்கள் தான் மனிதனின் சிறந்த நண்பன்" என்பதை நீங்கள் ஒரு நாய் வளர்த்தால் கண்டிப்பாக மறுக்க மாட்டீர்கள். ஆனால் செல்லப் பிராணிகள் வளர்ப்பதால் சில விஷயங்கள் உங்களுக்கு சிரமத்தை அளிக்கலாம். அதில் ஒன்று உங்கள் வீட்டை சுத்தமாக வைப்பது தொடர்பானது.

நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று – நாய்களின் முடியைப் பற்றி. முடி கொட்டாத எந்த ஒரு செல்லப் பிராணியும் இருக்க முடியாது; அதனால் வீடு முழுவதும் செல்ல பிராணியின் முடியை நாம் காணலாம். உங்களை நீங்களே அர்பணிக்காத வரை உங்கள் செல்ல பிராணிகளுடன் உங்களால் முழுமையான சந்தோஷத்துடன் இருக்க முடியாது. செல்ல பிராணிகள் வளர்க்கும் போது வீட்டை சுத்தப்படுத்துவது என்பது சுலபமான விஷயமல்ல. அதற்கு நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆயத்த நடவடிக்கைகள் உள்ளது.

வீட்டை கசகசவென மாற்றாத சரியான இனத்தை சேர்ந்த செல்லப் பிராணியை வாங்கிட வேண்டும். இதுவே பல பிரச்சனைகளை தீர்த்து விடும். ஏதாவது ஒரு இனத்தின் மீது நீங்கள் குறிப்பாக இருந்தால், வீட்டின் ஒவ்வொரு அம்சத்தை பற்றியும் நீங்கள் கருதிட வேண்டும்; வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்பதும் அதில் ஒன்று.

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கையில் வீட்டை சுத்தமாக வைத்திருக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில டிப்ஸ்களைப் பற்றி பார்க்கலாமா? உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள போதுமான ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள். உங்கள் செல்லப் பிராணியை தேர்ந்தெடுப்பதற்கு முன் இந்த ஆராய்ச்சியை முடித்துக் கொள்ள வேண்டும்.

செல்லப் பிராணியின் முடி உங்களிடம் செல்லப் பிராணி இருந்தால், வீடு முழுவதும், ஃபர்னிச்சர்கள் மற்றும் ஆடைகள் மீது அதன் முடிகளை காண நேரிடலாம். இதனை சமாளிக்க, உங்கள் செல்லப் பிராணி ஓய்வெடுக்கையில் ஈரத்துண்டு ஒன்றை வைத்திடலாம். குறிப்பிட்ட இடைவேளையில் அதனை வெளியில் எடுத்துக் கொண்டு உதறி விடவும். செல்ல பிராணியின் முடியை அவ்வப்போது வெட்டி விட்டு சரியாக வைத்திருந்தால், முடி உதிர்தலை பெருமளவில் குறைக்கலாம்.

வாக்யூம் கிளீனரால் சுத்தப்படுத்துங்கள் வீட்டில் செல்லப் பிராணிகள் இருக்கையில், வீட்டை சுத்தப்படுத்த சற்று கூடுதலான உழைப்பு தேவைப்படும். உங்கள் கார்பெட்களை வாக்யூம் கிளீனர் கொண்டு ஒரு வாரத்தில் பல முறை சுத்தப்படுத்த வேண்டும். ஆடைகளில் உள்ள முடியை சுத்தப்படுத்த டேப் ரோலரை பயன்படுத்துங்கள். மெத்தைகள், திரைச்சீலைகள், மேசை நாற்காலி முதலியவற்றின் விரிப்புகளை சுத்தப்படுத்த கையில் ஏந்திய வாக்யூம் கிளீனரை பயன்படுத்துங்கள்.

கறைகள் செல்லப் பிராணிகளால் ஏற்படும் கறைகளை உடனுக்குடன் துடைத்து விட வேண்டும். கார்பெட் மீது செல்லப் பிராணி சிறுநீர் கழிப்பது என்பது மிக பொதுவான ஒரு சுத்தப்படுத்தும் பிரச்சனையாகும். செல்லப் பிராணி பராமரிப்பு என வருகையில், கழிவறையில் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க உங்கள் செல்லப் பிராணிகளை பழக்கப்படுத்துங்கள். இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். கார்பெட்டின் பொருள் வகை மற்றும் கறையின் வயதை பொறுத்து, பல தேர்வுகள் உள்ளது.

மெத்தைகள், திரைச்சீலைகள், மேசை நாற்காலி முதலியவற்றின் விரிப்புகள் மெத்தைகள், திரைச்சீலைகள், மேசை நாற்காலி முதலியவற்றின் விரிப்புகள் சரியானதாக இருந்தால், உங்கள் ஃபர்னிச்சர்களை பாதுகாக்கலாம். ஆம் அது பிராணியின் முடியை தடுத்து, கிழிசல் வராமல் காத்து, சுலபமாக சுத்தப்படுத்த உதவும். செல்லப் பிராணிக்கு சரியாக பயிற்சி அளித்தால், மெத்தைகள், திரைச்சீலைகள், மேசை நாற்காலி முதலியவற்றின் விரிப்புகளை சரியாக பராமரிக்கலாம்.

முடியை ட்ரிம் செய்தல் செல்லப் பிராணியின் பராமரிப்பின் ஒரு அங்கமாக, சீரான முறையில் அவைகளின் முடியை ட்ரிம் செய்ய வேண்டும். இது சிராய்ப்புகளை பெருமளவில் குறைக்கும். செல்லப் பிராணிகள் ஏற்படுத்தும் சிராய்ப்புகளுக்கு முக்கியமாக பாதிக்கப்பட போவது கதவுகள். கதவுகள் பாதிப்படையமால் இருப்பதற்கு பிளெக்ஸிகிளாஸ் ஷீட் எனப்படும் பொருள் வகையை பயன்படுத்தலாம். செல்லப் பிராணிக்கு பயிற்சி அளித்து விட்டால் இந்த ஷீட்டை எடுத்து விடலாம். உங்கள் செல்லப் பிராணிகளுடன் பொன்னான நேரத்தை கழிக்க இந்த ஐடியாக்களை முயற்சி செய்து பாருங்கள்.
08 1433769145 5 dog

Related posts

ஏ.சி. ஒருகணம் யோசி!

nathan

இயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம்

nathan

உங்க இடுப்பளவு அதிகமா?? இதாங்க காரணம்!!

nathan

எப்படியெல்லாம் நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம்

nathan

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுகள்

nathan

வேர் உண்டு வினை இல்லை!

nathan

குண்டான பெண்களை விரும்பும் ஆண்கள்

nathan

பூச்சி கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? தெரிந்துகொள்வோமா?

nathan

உங்க உடல் எடையை குறைக்க உணவு உட்கொள்ளலை நிர்வகிப்பது எப்படி ?

nathan