மருத்துவ குறிப்பு

வாய் நாற்றத்தை போக்கும் இயற்கை வழிகள்

வாய் நாற்றத்தை போக்கும் இயற்கை வழிகள்
நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. ஆகவே நிறைய பேர் சாப்பிட்ட பின், வாய் நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்குகளை, ஏதேனும் சுயிங்கம்களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள்.ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாமே!!!ஏலக்காய்: உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

– மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால், எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியமாகவும், வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

Related posts

உடலில் நீர் கோர்ப்பது ஏன்?

nathan

நீங்கள் ஃப்ளூ காய்ச்சலில் இருந்து பாதுகாப்பாக இருக்கின்றீர்களா?

nathan

ஞாபகமறதி நோய் (Dementia)

nathan

நீரிழிவு என்றாலே பயமா? இதோ அற்புதமான எளிய தீர்வு: இந்த டீயை மட்டும் குடிங்க!

nathan

உங்கள் கவனத்துக்கு கால் கட்டை விரலில் மட்டும் சுருக்கென்று வலி வருகிறதா?அப்ப இத படிங்க!

nathan

இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த

nathan

தெரிந்துகொள்ளுங்கள் ! ஏலக்காயில் அடங்கியிருக்கும் நன்மைகள் இவ்வளவா?..

nathan

மூட்டு வலியை போக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

nathan

இல்லறம் இனிக்க கணவரிடம் பெண்கள் எதிர்பார்ப்பது

nathan