லிப்ஸ்டிக் வாங்கப் போகும் போது ஆயிரம் கேள்விகள் எழும். எந்த நிறத்தில், எந்த வகையான லிப்ஸ்டிக்கை வாங்குவது.
அது நமக்கு சரியாக இருக்குமா? இல்லையா? நாம் சரியாக இருக்கும் என்று வாங்குவது பிறகு நமக்கு நன்றாக இல்லை என்றால் எப்படி என்று பல குழப்பங்கள் ஏற்படும்.
பொதுவாக கடைகளில் உள்ள டெஸ்ட்டர் லிப்ஸ்டிக்குகளை உதட்டில் பயன்படுத்தாதீர்கள். அது சுகாதாரமானதல்ல. பிறகு எப்படி பார்த்து வாங்குவது என்றால், உங்களது கையின் பின்புற சருமத்தில் போட்டுப் பாருங்கள்.
உங்கள் சரும நிறத்திற்கு எந்த அளவிற்கு அந்த லிப்ஸ்டிக்கின் நிறம் ஒத்து வருகிறது என்பது உங்களுக்குக் கண் கூடாகவேத் தெரியும்.
அல்லது விரல் நுனிகளில் தடவி சரி பாருங்கள், இது உதட்டில் பயன்படுத்துவதற்கு ஈடானது.