27.5 C
Chennai
Sunday, Dec 15, 2024
sl4452
சிற்றுண்டி வகைகள்

ராஜ்மா சாவல்

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி-தேவைக்கு,
ராஜ்மா – 1 கப்,
பெரிய வெங்காயம் -2,
தக்காளி – 3,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லித் தூள் – 2 டீஸ்பூன்,
கிரீம் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

தாளிக்க…

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
பட்டை – 1 சிறிய துண்டு,
பிரிஞ்சி இலை – 1,
ஏலக்காய் -1,
கிராம்பு – 1.

எப்படிச் செய்வது?

ராஜ்மாவை 10 முதல் 12 மணி நேரம் வரை ஊர வைத்துக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய சாமான்களை தாளித்த பின் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின், சிறிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

சிறிது நேரம் கழித்து, மல்லி, மிளகாய், கரம் மசாலா தூள், கிரீம் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின், வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து கொதிக்க விடவும். உங்கள் விருப்பத்திற்கேற்ப 1/2 முதல் 1 கப் வரை தண்ணீர் சேர்த்து கொதித்த பின் மல்லித் தழை தூவி வேக வைத்த பாஸ்மதி அரிசியுடன் பரிமாறவும்.sl4452

Related posts

மசால் வடை

nathan

கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

கம்பு தயிர் வடை

nathan

பூண்டு ஓம பொடி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் கோபி ரோல்

nathan

சுவையான சத்தான உளுந்து கார புட்டு

nathan

மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்வது எப்படி

nathan

சத்தான கறிவேப்பிலை அடை செய்வது எப்படி

nathan

தயிர் மசாலா இட்லி

nathan