26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 6242e120
மருத்துவ குறிப்பு

மார்பக வீக்கம்.. குமட்டல்! இன்னும் பல அறிகுறிகள்?

பெண்கள் முழுமையடைவது தாய்மையில் தான். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியமான கால கட்டம் என்றே சொல்லலாம்.

உலகில் புதிய உயிரை கொண்டு வரும் உன்னத பேறை பெறுகிறாள் பெண் என்பவள். அத்தகைய சிறப்பு மிக்க கர்ப்ப காலத்தில் பெண் மனதளவிலும் உடல் அளவிலும் பல்வேறு மாற்றங்களைப் பெறுகிறாள்.

இதைதான் பேறுகாலம், கர்ப்ப காலம்,மகப்பேறு காலம், பிரசவக் காலம் என்று பல பெயர்களில் அழைக்கிறோம்.

மகிழ்ச்சியான இக்கால கட்டங்களை இனிமையாகக் கடக்க விரும்பும் பெண்கள் முதலில் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.

 

மதம் மாறியது ஏன்? பிக்பாஸ் வனிதா உடைத்த உண்மை

கருவுறுதலுக்கு திட்டமிடும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்
இளம் தம்பதியினர் குழந்தை பெற்றெடுக்க திட்டமிடும் போது, கருவின் ஆரோக்கியம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கருவுறுதல் துரிதப்படுத்துவதுடன், கருமுட்டையை ஆரோக்கியமாக வைத்து கருவின் வளர்ச்சியை சீராக்கும்.

எனவே என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கருவின் வளர்ச்சியில் இரும்பு, கால்சியம், வைட்டமின் டி, அயோடின் (Nutrients for growth) போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

 

இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளான ஈரல், மீன், பருப்பு, சோயாபீன்ஸ், பட்டாணி, பூசணி, எள், ஆளி விதைகள், பச்சை காய்கறிகள், தக்காளி, உருளைக்கிழங்கு, காளான்கள் என இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவும்.

பால், மீன் மற்றும் பால் பொருட்கள் என கால்சியம் அதிகம் கொண்ட உணவுகளையும் தவறாமல் சாப்பிடுங்கள், கால்சியம் உறிஞ்ச வைட்டமின் டி அவசியம் என்பதால் காலை வேளையில் சூரிய ஒளியில் நேரத்தை செலவிட மறக்க வேண்டாம்.

மிக குறிப்பாக குழந்தையின் நரம்பு மண்டலத்தை வலுவாக்க அயோடின் தேவைப்படும், எனவே அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துங்கள்.

 

பப்பாளியின் பக்கவிளைவுகள் என்ன? யாரெல்லாம் அதிகமாக சாப்பிடக்கூடாது

கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?
மாதவிடாய் தள்ளி போவது:

ஒரு பெண்ணுக்கு ஒழுங்கான முறையில் மாதவிடாய் வந்திருந்தாலும், ஒழுங்கற்ற முறையில் வந்திருந்தாலும் கர்ப்பமாக இருக்கும்போது கண்டிப்பாக நின்றுவிடும். இது தான் ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதற்கான முதல் அறிகுறி.

மார்பகம் வீங்குதல்:

ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் மார்பகம் மென்மை அடைந்து வீங்கி காணப்படுகிறது. இது அசவுகரியமான உணர்வை தந்தாலும், சில வாரங்களில் சரியாகிவிடும்.

குமட்டல்:

இது பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவுகரியத்தை தரும் ஒன்றாகும். ஒரு சில கர்ப்பிணிகளுக்கு வாந்தியுடன் கூடிய குமட்டல் உணர்வும் இருக்கும்.

இருப்பினும், 14 வாரங்களில் இப்பிரச்சனை குறையக்கூடும். ஒரு சிலருக்கு இறுதி வரையும் கூட இப்பிரச்சனை இருக்கவும் செய்கிறது.

சிறுநீர் கழிக்கும் போது வலியால் துடித்த பெண்: 4 வருடங்களுக்கு முன்பு செய்த தவறு X-Rayல் அம்பலம்

சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு:

வழக்கத்திற்கு மாறாக சிறுநீர் கழிக்க வேண்டிய எண்ணம் வரும். நம்முடைய உடலில் உள்ள இரத்தமானது கர்ப்பமாக இருக்கும்போது அதிகரிக்க செய்கிறது.

இதனால், சிறுநீர்ப்பையில் கூடுதல் திரவம் சுரந்து சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.

உடல் சோர்வு:

உடல் சோர்வும் இந்த நேரத்தில் அதிகமாக இருக்கும். எனவே கர்ப்பிணிகள் அதிகம் தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். இந்த சமயம் அதிகம் ஓய்வில் இருக்க வேண்டுமென்ற எண்ணம் நமக்கு வரும்.

 

முதுகு வலி வருதல்:

மாதவிடாய் சமயத்தில் வருவது போல, ஆரம்ப கால கர்ப்பத்தின் போதும் முதுகு வலி உண்டாகும். இதற்கு காரணம் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் தான்.

தலைவலி:

முதல் மூன்று மாதங்களில் தலைவலி வருவது கர்ப்பக்காலத்தில் பொதுவான பிரச்சனை தான். இது இரண்டாவது மூன்று மாதங்களும் தொடரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, போதுமான ஓய்வு உங்களுக்கு மிகவும் அவசியம்.

சிவப்பு நிற சேலையில் வசீகரிக்கும் தேவதையாய் பிரியங்கா மோகன்

கர்ப்ப கால வாந்தியை எதிர்கொள்ள சில வழிகள்
காலை எழுந்தவுடன் பால், காபி, டீ போன்றவற்றை தவிர்ந்த்து, அதற்கு பதிலாக சத்து மாவு கஞ்சி அல்லது கூழ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். டீ, காபி இன்னும் அதிகமாக வாந்தி உணர்வை தூண்டும்.

உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கிறதோ, எந்த வகையில் சாப்பிட பிடிக்கிறதோ அப்படி சமைத்து சாப்பிடுங்கள். மசாலா, காரம், எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பதால் உடலும், மனமும் சோர்வாகத்தான் இருக்கும். ஆனாலும் அவ்வப்போது சிறிது நடைப்பயணம் மேற்கொள்வது சவுகரியமாக இருக்கும்

மயக்கமாக இருக்கும் போது மிதமான சூட்டில் தண்ணீரில் க்ளூகோஸ் கலந்து குடிக்கலாம். அதே போல் எழுமிச்சை சாறு தண்ணீரை சற்று மிதமான சூட்டில் அடிக்கடி பருகலாம்.

 

நாக்கிற்கு ருசியாக இருக்கிறது என்று சில பேர் ஊறுகாய் அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். ஊறுகாய் அதிகம் சாப்பிடுவது கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும்.

காலை, மதியம், இரவு என மூன்று வேலை உணவு எடுத்துக் கொள்வதற்கு பதிலாக ஒரு நாள் முழுவதும் சிறிய இடைவேளைகளில் சாப்பாடு, காய்கறி சூப், பழங்கள், உலர் பழங்கள், நட்ஸ், பச்சப்பயிறு, கொண்டைக்கடலை என கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள். அதற்காக எதை சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது என சாப்பிடாமல் இருக்கக்கூடாது. கஞ்சி, கூழ், சூப், பழச்சாறு, நட்ஸ் என ஏதாவது சத்தான உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

சாப்பிட்டவுடன் அதீத சோர்வாக இருக்கும். உடனே படுக்கவோ, சாயவோ செய்யாதீர்கள். வாந்தி வரும். அல்லது தூங்கி எழுந்தவுடன் வாந்தி வரும். அதனால் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உட்காருங்கள்.

சோர்வாக இருந்தலும் உட்கார்ந்து கொண்டே ஏதாவது வேலை செய்ய முயற்சி செய்யுங்கள். கிராஃப்ர்ட், எழுதுவது, வரைவது என மூளைக்கு சிறிது வேளை கொடுத்துப் பாருங்கள் நமது மனநிலையில் வித்தியாசம் தெரியும்.

 

பாக்கியலட்சுமி கணவர் கோபி யார்னு தெரியுமா? வைரலாகும் பழைய புகைப்படம்

வாந்தியை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியம்
இஞ்சி டீ

இயற்கையாக வாந்தியை கட்டுப்படுத்துவதில் இஞ்சி சிறந்தது. இஞ்சி டீ குடிக்கலாம். தண்ணீரில் இஞ்சியை கொதிக்க வைத்து சிறிது தேன் கலந்து அருந்தலாம். இஞ்சி மிட்டாய் சாப்பிடலாம்.

எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழச்சாரும் வாந்தியை கட்டுப்படுத்த உதவும். ஒரு நாள் முழுவதும் மிதமான சூடான தண்ணீரில் எழுமிச்சை பழச்சாறும், சிறிது கல் உப்பும் கலந்து வைத்து கொண்டு அருந்தலாம்.

எழுமிச்சை சாதம் சாப்பிடலாம். நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் கலந்த லெமன் டீ குடிக்கலாம்.

தண்ணீர்

தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வாந்தி எடுக்கும் போது உண்டாகும் உடல் நீர் வறட்சியை மற்றும் மலச்சிக்கலை போக்க தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறை வாந்தி எடுத்த பின்னும் மிதமான சூட்டில் தண்ணீர் குடிப்பது நல்லது.

இளநீர் மற்றும் மோர்

காலை உணவுக்குப் பிறகு 11 மணியளவில் இளநீர், மோர் குடிக்கலாம். உடல் நீர் வறட்சியை போக்கும் சிறந்த ஆகாரங்கள் இது.

 

பெருஞ்சீரகம்

வாந்தி உணர்வு ஏற்படும் போது தண்ணீரில் சிறிது பெருஞ்சீரம் சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து அல்லது எதுவும் கலக்காமலும் சாப்பிடலாம்.

பட்டை அல்லது கிராம்பு

பட்டை அல்லது கிராம்பு இவற்றினை தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

கர்ப்ப கால ஆரம்பத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
பப்பாளி மற்றும் அன்னாசி

கர்ப்ப காலத்தில் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஆனால் ஒருசில பழங்களை தொடவே கூடாது. அதில் பப்பாளி மற்றும் அன்னாசி கருவிற்கு ஆபத்தை விளைவிக்கும் பழங்கள் ஆகும்.

மீன்

மீன்களில் அதிக அளவில் மெர்குரி இருப்பதால், அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. குறிப்பாக ஸ்வார்டுபிஷ், சுறா மற்றும் ராஜா கானாங்கெளுத்தி போன்றவைகளை சாப்பிடவே கூடாது. வேண்டுமானால் சால்மன் மீன் சாப்பிடலாம். ஆனால் அதுவும் மாதத்திற்கு ஒரு முறை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.

மீன் சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா? பலரும் அறிந்திடாத உண்மை

இறைச்சி

இறைச்சிகளை சாப்பிடும் போது பாதியாக வேக வைத்து சாப்பிடக்கூடாது. இதனால் இறைச்சியில் உள்ள கிருமியானது சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இறைச்சியை நன்கு மென்மையாக வேக வைத்து சாப்பிட வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தொடவே கூடாது.

பச்சை பால்

பாலில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் பாலை அதிகம் குடிப்பார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் பாலை பச்சையாக குடிக்கக்கூடாது.

முட்டை

கர்ப்பிணிகள் முட்டையை பச்சையாகவோ அல்லது பாதியாக வேக வைத்ததையோ சாப்பிடாமல், நன்கு வேக வைத்த முட்டையை தான் சாப்பிட வேண்டும்.

 

சீஸ்

அனைத்து சீஸ்களுமே ஆபத்தானவை அல்ல. ஆனால் ஒருசில சீஸ்களானது சுத்திகரிக்கப்படாத பச்சையான பால் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். அத்தகைய சீஸ்களை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால், சுத்திகரிக்கப்பட்ட பால் கொண்டு செய்யப்பட்ட சீஸை சாப்பிடலாம்.

பிரஷ் ஜூஸ்

பிரஷ் ஜூஸ் என்று கடைகளில் விற்கப்படும் ஜூஸ்களை வாங்கி குடிப்பதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சுத்தம் இருக்காது. வேண்டுமானால், வீட்டிலேயே செய்து குடிக்கலாம்.

ஈரல்

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஈரல் எனப்படும் இறைச்சிகளின் கல்லீரல். ஏனெனில் இவற்றில் வைட்டமின் ஏ அளவுக்கு அதிகமாக இருப்பதால், இது சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

காப்ஃபைன் உள்ள பொருட்கள்

காப்ஃபைன் உள்ள பொருட்களை, கர்ப்பத்தின் ஆரம்பத்தில் தவிர்க்க வேண்டும். மேலும் கர்ப்ப காலம் முழுவதும் அளவாகத் தான் காப்ஃபைன் உள்ள பொருட்களான டீ, காபி, சாக்லெட், குளிர் பானங்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

ஆல்கஹால்

எக்காரணம் கொண்டும் ஆல்கஹால் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் சுவைத்துக் கூட பார்த்துவிட வேண்டாம். இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, சில சமயங்களில் கருச்சிதைவையும் ஏற்படுத்திவிடும்.

 

கர்ப்ப கால நீரிழிவு எவ்வாறு தெரிந்து கொள்வது?
கர்ப்ப கால நீரிழிவானது கர்ப்பம் தரித்து ஐந்து மாதங்களுக்குப் பிற்பட்ட காலத்திலே ஏற்படும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் மூன்று மாதத்திற்கு சர்க்கரையின் அளவினை சோதித்து கொள்ள வேண்டும்.

ஆரம்பகாலத்தில் நீரழிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அது கர்ப்பகால நீரழிவு இல்லை. இது நாள்பட்ட நீரிழிவு என்றே அர்த்தம்.

உங்களது இரத்த வகை இதுவா? நீரிழிவு நோய் தாக்கும் ஜாக்கிரதை

கர்ப்ப காலத்தில் நீரிழிவு தாக்கம் என்பது 5 மற்றும் 6வது மாதத்தில் சர்க்கரை அளவை சோதனை செய்யும் நீரிழிவு தாக்கம் இருந்தால் மட்டுமே கர்ப்ப கால நீரிழிவு என்று அர்த்தம்.

கர்ப்பகால நீரழிவு ஏற்பட்ட தாயின் குழந்தைகளுக்கு அவ்வளவாக சுகவீனம் ஏற்படுவதில்லை. மாறாக சர்க்கரையின் அளவு அளவிற்கு அதிகமாக இருந்தால், குழந்தை பிறக்கும் போது பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

நீரழிவு நோயுள்ள கர்ப்பிணிகளுக்கு ஆரம்பத்தில் குறிப்பிடப்படிருக்கும் தேதிக்கு இரண்டு வாரத்திற்கு முன்பே பிரசவிக்கப்படுகின்றது. ஏனெனில் நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணியால் வயிற்றில் உள்ள குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

Related posts

மாணவர்களுக்கு ஆற்றலை அதிகரிக்கும் பகல் நேர குட்டித் தூக்கம்

nathan

தெரிஞ்சிக்கங்க… மெட்ராஸ் ஐ தாக்கத்தில் இருந்து விரைவில் விடுபட சில வீட்டு வைத்தியங்கள்!!!

nathan

பெற்றோர்கள் குழந்தையை வழிநடத்துவது எப்படி?

nathan

கணவரை நச்சத்துக்கொண்டே இருக்கும் மனைவி

nathan

துளசி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் அற்புத நன்மைகள்!!!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! கர்ப்ப காலத்தில் நிம்மதியாகத் தூங்க அருமையான வழிகள்!!

nathan

உதிரப் போக்கின் போது வயிற்று வலியை தவிர்ப்பது எப்படி?

nathan

விவாகரத்துக்கு முன்பும்.. பின்பும்..

nathan

குழந்தைகளுக்கு வலி நிவாரண மாத்திரைகளை கொடுக்கலாமா? தெரிஞ்சிக்கங்க…

nathan