பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஒரு கடினமான காலமாக பார்க்கப்படுவதைப் போலவே, பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகள் ஒரு பெரிய தொல்லையாக பார்க்கப்படுகின்றன. இந்த தொற்று 4 பெண்களில் 3 பேரை பாதிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சோப்புகள், க்ரீம்கள், ஆடைகள் போன்ற இரசாயனப் பொருட்களுக்கு ஏற்படும் எதிர்வினையால் இந்த தொற்று ஏற்படுகிறது. இந்த கட்டுரை மாதவிடாய் காலத்தில் யோனி ஈஸ்ட் தொற்றுக்கான சிகிச்சைகள் பற்றி விவாதிக்கிறது.
என்ன காரணம்?
மாதவிடாய் தொடங்குவதற்கு உடலில் அதிகளவில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு, சுழற்சி தொடங்கிய பிறகு குறைய தொடங்குகிறது. அதிகமாக வளரும் கேண்டிடா என்ற பூஞ்சையால் தொற்று ஏற்படுவதற்கு ஈஸ்ட்ரோஜன் முக்கிய காரணமாகும். இது வல்வோவஜினிடிஸ் என அழைக்கப்படுகிறது
பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்கள், ஒட்டுண்ணி போன்றவை காரணமாகவும் இது ஏற்படுகிறது. பிறப்புறுப்பில் வழக்கத்தை விட வித்தியாசமான வார்த்தை, அசௌகரியமாக உணர்ந்தால் யோனி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கவனத்தில் கொள்ள வேண்டும்.
அறிகுறிகள்
யோனியில் இருந்து திரவ வெளியேற்றம், வீக்கம், தடிப்புகள், தொடர்ச்சியான அரிப்பு, துர்நாற்றம்,வலி, எரிச்சல் போன்றவற்றின் மூலம் இந்த தொற்று வெளிப்படலாம். மேலும் உடலுறவு, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் போன்ற வலி ஏற்படுவதற்கும் இதுவே காரணமாகும்.
என்னென்ன தடுப்பு முறைகளை பின்பற்றலாம்
எளிய உடல் பரிசோதனை மூலம் யோனி ஈஸ்ட் தொற்றை நாம் கண்டறியலாம். இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில் இது பிறப்புறுப்புகளை நிரந்தரமாக சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
பூஞ்சை காளான் எதிர்ப்பு மருந்துகள் மூலம் இதனை குணப்படுத்தலாம். இதைவிட முக்கியம் மாதவிடாய் காலத்தில் பிறப்புறுப்பை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இது யோனி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை கட்டுப்படுத்துகிறது.
புரோபயோடிக் உணவுகள்:
லேக்டோபேசில்லஸ் என்பது ஆரோக்கியமான யோனி பராமரிப்புக்கு உதவும் பாக்டீரியாவான புரோபயாடிக்குகளின் மாற்றாகும். இவை கேண்டிடா பூஞ்சையை எதிர்த்து போராட உதவுகிறது. தோசை மற்றும் இட்லி, யோகார்ட் , ஊறுகாய், தயிர் , சீஸ் போன்ற நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த புரோபயாடிக்குகள் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அவை யோனி தொற்றை தடுக்க உதவுகிறது.
உள்ளாடைகளை தினமும் மாற்றுங்கள்
இந்த தொற்றால் யோனியின் வெளிப்புறத்தில் எரிச்சலூட்டும் ஈரப்பதம் காரணமாக துர்நாற்றம் ஏற்படலாம். அதிக ஈரம், வியர்வை ஏற்பட்ட உள்ளாடைகளை அணியக்கூடாது.
மேலும் தொற்று ஏற்பட்டவர்கள் பயன்படுத்திய உள்ளாடைகளை துவைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். லேசான தொற்று 3 நாட்களிலும், அதிகப்பட்சம் 2 வாரங்கள் வரை ஆகலாம் என்பதால் உள்ளாடை விஷயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள்.
நாப்கின்களை அடிக்கடி மாற்றவும்
மாதவிடாயின்போது பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின்கள், மென்ஸ்ட்ரூவல் கப் போன்றவற்றை குறைந்தது 5-6 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
மேலும் பிறப்புறுப்பு இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் நாப்கின்களில் படியும் கறையில் ஏற்படும் நிறமாற்றம் காரணமாகவும் யோனி தொற்று ஏற்பட்டுள்ளதை கண்டறியலாம்.
அரிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்
மாதவிடாயின் போது பயன்படுத்தும் நாப்கின் பேட்களில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் வெப்பம் சினைப்பை பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்தலாம்.
இதனை தடுக்க நறுமணம் இல்லாத சானிட்டரி நாப்கின் மற்றும் டம்பான்களை பயன்படுத்தவும். மேலும் தளர்வான உள்ளாடைகள், மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் இதனை தடுக்க முடியும்.
நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்
உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நீரிழப்புடன் இருக்கும் போது யோனியில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் சமநிலையில் சீர்குலைவை சந்திக்கிறது. இது உடலில் உள்ள நச்சுகள், பாக்டீரியாக்களை வெளியேற்றி pH அளவை பராமரிக்க உதவுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு குறைந்தது 8 கிளாஸ் அளவுக்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள்
உங்கள் யோனியில் வாசனை சோப்பு உள்ளிட்ட நறுமணப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது சருமத்தை எரிச்சலடையச் செய்து நல்ல பாக்டீரியாவை சீர்குலைக்கிறது.இதன் காரணமாக வீக்கம், அரிப்பு, வலி போன்றவை ஏற்படுகிறது.
சாதாரண தண்ணீர் மட்டும் கொண்டு சுத்தப்படுத்தினாலே போதும்.
குளிக்க மறக்காதீர்கள்
மாதவிடாய் காலம் மட்டுமல்லாமல் பிற நாட்களிலும் குளிக்க மறக்காதீர்கள். இதனால் யோனி தொற்றுக்கு காரணமாக அமையும் வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. மேலும் குளிப்பது என்பது இயற்கையாகவே நீங்கள் புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் செயல்பட உதவுகிறது.
வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துங்கள்
குளிக்கும் போது அதிக சூடாகவோ, குளிராகவோ இல்லாமல் தினமும் வெதுவெதுப்பான நீரில் உங்கள் யோனியை சுத்தப்படுத்தவும். ஸ்க்ரப்கள், வாசனை சோப்புகள் போன்றவற்றை தவிர்த்து gentle soap எனப்படும் மென்மையான சோப்புகளை பயன்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் யோனியின் உள்பகுதியை சுத்தப்படுத்த முயற்சிக்க கூடாது.
ஈரப்பதமாக வைத்திருக்கவும்
யோனி பகுதி மென்மையானது என்பதால் அதனை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள தேங்காய் எண்ணெய் அல்லது வாசனையற்ற மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தலாம்.
ஆனால் பலரும் பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்யவும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் சோப்பு மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து லிக்விடுகளை பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் தவறு. இவை பிறப்புறுப்பு பகுதியில் இயல்பாகவே தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தொற்றுக்களை அண்டவிடாமல் தடுக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்து விடும்.
கார உணவுகளை தவிர்க்கவும்
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, அதிக லாக்டோஸ் அடங்கிய பால் பொருட்கள், காரமான உணவுகள் போன்றவை உடலில் கேண்டிடா அதிகமாக வளர வழிவகை செய்வதால் இதனை தவிர்த்து யோனி தொற்றை தவிர்க்கவும்.