வெந்தயம் ஒரு சிறு செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும்.. இதன் இலை நேர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மூன்றாகப் பிறியும் 5 செ.மீ. நீளமுடையது. இது செடியாக இருக்கும் பொழுது பூ பூக்கும் பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன் படுத்துவார்கள்.
பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். அதைக் காயவைக்கவேண்டும். காய்ந்த விதையை வெந்தயம் என்பார்கள் விதை இரு பிளவு போன்றிருக்கும் அது 50 -110 மில்லி நீளம் இருக்கும். அது மரக்கலரில் இருக்கும். ஒரு கிலோ வெந்தயத்தில் சுமார் 50,000 விதைகள் இருக்கும். இது மூன்று மாத த்தில் வளரக்கூடியது. இதை சமையல் செய்வதற்கும் மருந்தாகவும் பயன் படுத்துவார்கள்.
ஒரு கிலோ வெந்தயத்தில் சுமார் 50,000 விதைகள் இருக்கும். இது மூன்று மாத த்தில் வளரக்கூடியது. இந்தச் செடியை ஆதிகாலத்தில் மாட்டுத்தீவனமாகவும் பயன் படுத்தினார்கள். இதை சமயல் மற்றும், மருந்தாகவும் பயன் படுத்துவார்கள்.சர்வ சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வெந்தயம் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தக்கூடியது. தாய்பால் சீராக வராத தாய்மார்கள் வெந்தயம் சாப்பிட்டு வருவதன் மூலம் தாய்பால் பெருகும்.
தீக்காயம் மற்றும் தீப்புண் ஏற்பட்டு இருப்பின் வெந்தயத்தை பொடி செய்து பற்றிட்டு வர எளிதில் தீக்காயம் குணமாகும்.
மேலும் மதுமோகம் கொண்டவர்கள் வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.
உடலில் சூட்டினால் ஏற்படக்கூடிய கட்டிகள் பழுத்து உடையச் செய்வதற்கு வெந்தயத்தை வைத்து தொடர்ந்து கட்டி வர கட்டிகள் உடைந்துவிடும் வலியையும் போக்கும் தன்மை கொண்டது.. சர்க்கரை வியாதியை குணமாக்க கூடியதில் வெந்தயமும் இடம்பெரும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.
ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.
வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சலி தணிந்து ஆறும். வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.
வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.
இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து, அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும்.
பெண்கள் தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது. முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடு சேர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலையில் தேய்த்து பின்னர் தலைகுளித்து வந்தால் உடல் சூடு தணிவதோடு முடியும் நன்கு வளரும்..
முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.