26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
polaroid2
ஆரோக்கியம்யோக பயிற்சிகள்

மன நலமும், உடல் நலமும் மேம்பட யோகாசனம்…..

‘‘பெண்களில் பெரும்பாலானோர் முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் வயதானவர்கள், குழந்தை பெற்ற பெண்கள்தான் முதுகுவலி பாதிப்புக்கு ஆளானார்கள். இப்போது வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் முதுகுவலி அவதிப்பட வைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் உடலுழைப்பு குறைந்துபோனதுதான். முன்பு பார்த்த வேலைகளிலெல்லாம் உடற்பயிற்சியும் சேர்ந்தே இருந்தது. இப்போது எல்லா வேலைக்கும் இயந்திரத்தை சார்ந்திருக்கிறோம். துணி துவைப்பது, மசாலா அரைப்பது என வீட்டுவேலைகளையெல்லாம் இயந்திரங்களிடம் கொடுத்துவிட்டு உடலுழைப்பை இழந்து சோம்பேறியாகிவிட்டோம். வீட்டிலும், அலுவலகத்திலும் நிறைய பேர் நேராக உட்காருவதில்லை. வளைந்து, குனிந்து இஷ்டம்போல் அமர்கிறார்கள். அந்த பழக்கம் முதுகுதண்டுவடத்தை பலவீனமாக்கிவிடுகிறது’.
சர்ப்பாசனம், மகராசனம், சலபாசனம், யான் ஆசனம், புஜங்காசனம், ஜெய்ஸ்டிகாசனம், அடவாசனம் ஆகிய 7 ஆசனங்களை செய்துவந்தால் போதும். முதுகுவலி பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். இவை எளிமையான ஆசனங்கள்தான். ஒருவர் வயதான காலத்திலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவருடைய முதுகுத் தண்டுவடம் வலிமையாக இருப்பதுதான் காரணம். யோகாசனம் மூலம் முதுகுத்தண்டுவடத்தை வலுப்படுத்தலாம்.

polaroid2

யோகாசனம் கற்றுக்கொள்பவர்களிடம் மனத்தெளிவு இருக்கும். சிந்திக்கும் ஆற்றல் மேம்படும். மனதை கட்டுப்படுத்தும் பக்குவம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரேனும் பிரச்சினை செய்தால் எதிர்த்து வாதாடாமல் பக்குவமாக அவர்களை அணுகும் சுபாவத்தை யோகாசனம் கற்றுக்கொடுக்கும். பிரச்சினையை எப்படி சுமுகமாக தீர்ப்பது என்ற சிந்தனையை மேலோங்கச் செய்யும். குடும்பத்தில் உள்ள அனைவரும் யோகாசனம் கற்றுக்கொண்டால் அவர்களுக்குள் எந்த சச்சரவும் எழாது.

‘‘நாம் சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணம் சரியாக நடந்தால்தான் அந்த சத்துக்கள் நமது உடலில் சேரும். செரிமானம் சீராக நடைபெறுவதற்கு மூச்சு பயிற்சி உதவும். நாடிசோதனம் எனும் மூச்சு பயிற்சியை செய்து வந்தால் நுரையீரலில் சேரும் மாசுகளும் நீங்கும். ரத்தமும் சுத்திகரிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நடு விரலை நெற்றியில் வைத்துக் கொண்டு கட்டை விரலால் மூக்கின் ஒரு பகுதியை அழுத்திப் பிடித்துக் கொண்டு மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். அதேபோல் மற்றொரு மூக்கின் பகுதியையும் விரலால் அழுத்தி பிடித்துக்கொண்டு மூச்சை இழுத்து சுவாசிக்க வேண்டும். எவ்வளவு வேகமாக மூச்சை உள்ளே இழுக்கிறோமோ அதிலிருந்து இரண்டு மடங்கு மெதுவாக மூச்சை வெளியேற்ற வேண்டும். தினமும் ஆறு ஏழுமுறை முறை இவ்வாறு செய்து வந்தால் ஜீரணம் சரியாக நடக்கும்.

தேவையற்ற கொழுப்புகள் வெளியேறாமல் உடலில் அப்படியே தங்கிவிடுவதால் உடல் குண்டாகும். உடல் குண்டானால் ஜீரண பிரச்சினையும் தோன்றும். மூச்சு பயிற்சி மேற்கொள்ளும்போது ஜீரணம் தடையின்றி நடந்து தேவையற்ற கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு விடும். பிறந்த குழந்தை சரியாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டுக்கொண்டிருக்கும். அதுதான் சரியான மூச்சுபயிற்சி முறை. நாம் வளர்ந்து ஆளானதும் சுவாசிக்கும் முறையில் தவறு செய்து விடுகிறோம். சுவாசம் சரியான முறையில் நடந்தாலே உடல் உபாதைகள் ஏற்படாது’’. இன்றைய தலைமுறையினர் கட்டாயம் யோகாசனம் கற்றுக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சிகளை போல் யோகாசனத்திற்கு நேரமோ, செலவோ செய்ய வேண்டியதில்லை. ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதாக இருந்தால் அங்கு செல்வதற்கு தயாராகுவதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டியிருக்கும். திரும்பி வரு வதற்கும் அதேபோல் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால் யோகாசனத்தை இருந்த இடத்தில் இருந்தே செய்துவிடலாம். அதன் மூலம் மன நலமும், உடல் நலமும், பொருளாதார நிலையும் மேம்படும். உறவுச்சிக்கல்களும் நீங்கும்.

Related posts

தோள்பட்டை, கைகளுக்கு வலிமை தரும் உடற்பயிற்சி

nathan

முடியின் பராமரிப்பிற்கு தக்காளி

sangika

தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா

nathan

மீண்டும் ஏற்படும் கொழுப்பை நீக்க 5 சுலபமான வழிகள்

nathan

மங்குஸ்தான் பழத்தின் மகத்துவங்கள்

nathan

காலணிகள் வாங்கும் போது கட்டாயம் இவற்றை கவனியுங்கள்

sangika

பைக் ஓட்டினா… பயிற்சி செய்யுங்க!

nathan

நீரிழிவு நோயின் எதிரி

nathan

அவசியம் படிக்க.. கால் மூட்டுகளில் `கடக் முடக்’ சத்தமும் வலியும் ஏன் வருகிறது;

nathan