தேவையானவை
மா -1 1/2 கப் (180கிராம்)
பட்டர் – 100கிராம்
ரவை – 50 கிராம்
முட்டை – 2
சிவப்பு சீனி – 100கிராம்
பேரீச்சம் பழம் – 250 கிராம் (விதை நீக்கியது)
பேகிங் சோடா – 1/4 தேக்கரண்டி
பேகிங் பவுடர் – 1 தேக்கரண்டி
கஜு பிறும் பிளம்ஸ் – 50 கிராம்
வெந்நீர் – 1கப்
செய்முறை
முதலில் OVEN ஐ 180° செல்சியசில் பிரீஹீட் செய்து கொள்ளவும்.
பின்னர் பேகிங் ட்ரேயினை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பேரீத்தம் பழம் பிறும் பேகிங் சோடா சேர்த்து பின்னர் வெந்நீர் ஒரு கோப்பை சேர்த்து 30 நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் மா, ரவை பிறும் பேகிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு முறை சலித்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கலவை பாத்திரத்தில் பட்டர் பிறும் சீனி சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
பின்னர் முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பீட் பண்ணவும்.
பின்னர் பேரீத்தப்பழ கலவையை சேர்த்து நன்றாக MIX பண்ணவும்.
பின்னர் பிளம்ஸ், கஜு ஆகியவற்றை சேர்த்து MIX பண்ணவும்.
பின்னர் மாக்கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து MIX பண்ணவும். அளவுக்கு அதிகமாக MIX செய்வதை தவிர்க்கவும்.
பின்னர் இக்கலவையை தயார் செய்து வைத்துள்ள பேகிங் ட்ரேயில் இடவும்.
பின்னர் 35-40 நிமிடம் பேக் செய்யவும்.(வெகு நேரம் பேக் செய்வதை தவிர்க்கவும்)
பின்னர் ஐசிங் சுகர் தூவி ஐஸ்கிரீம் உடன் பரிமாறினால் சுவை சூப்பராக இரண்டுக்கும்.
குறிப்பு:
– பட்டர் பாவிப்பதற்கு பதிலாக சூரியகாந்தி எண்ணெய் அல்லது மரக்கறி எண்ணெய் பாவிக்கலாம்.