28.6 C
Chennai
Monday, May 20, 2024
Capture 259
கேக் செய்முறை

பேரீச்சம்பழக் கேக்

தேவையானபொருட்கள்

400 கிராம் றவ்வை
350 கிராம் சீனி
250 கிராம் மாஜரீன்
400 கிராம் பேரீச்சம்பழம் ( விதை நீக்கியது)
250 கிராம் முந்திரிகை வற்றல்
1/2 ரின் அன்னாசி
1/2 ரின் ரின்பால்
5 முட்டை
50 கிராம் இஞ்சி
1 கிளாஸ் தேயிலைச்சாயம் (4 பைக்கற் தேயிலையை ஊற வைத்து எடுக்கவும்)
1 மேசைக் கரண்டி பேக்கிங் பவுடர்
1 மேசைக்கரண்டி வனிலா
50 கிராம் கஜூ

செய்முறை
முதலில் இஞ்சியை சுத்தமாக்கி விழுதுபோல் அரைத்து எடுக்கவும்.
அதனோடு பேரீச்சம்பழம், தேயிலைச்சாயம் சேர்த்து 6-10 மணித்தியாலங்கள் ஊற வைக்க வேண்டும்.
வேறொரு பாத்திரத்தில் சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும். சீனி கரைந்ததும் அதனுள் முட்டையையும் ரின்பாலையும் சேர்த்து அடிக்கவும்.
பின்னர் ஊறவைத்த சேர்வையை கசக்கி தனியாக அடித்து கொள்ளவும்.
பின்னர் இரண்டையும் சேர்த்து நன்றாக அடிக்கவும். அன்னாசியையும் சிறு துண்டுகளாக்கி அதனுள் சேர்த்துக் கொள்ளவும்.
கடைசியில் றவ்வை, பேக்கிங்பவுடர், வனிலா போன்றவற்றை தனியாக கலக்கிய பின்னர் அதனுள் சேர்த்து கொள்ளவும்.
அத்துடன் கயு, முந்திரியை வற்றல் என்பவற்றையும் சேர்த்து கலக்கிய பின்னர் 175 பாகையில் 30 நிமிடம் பேக் பண்ணி எடுக்கவும்.

(குறிப்பு: இஞ்சியை அரைத்து தேயிலை சாயத்தினுள் ஊறவைத்து பின்னர் தும்பு இல்லாது வடித்து சாயத்தை எடுத்தும் பயன்படுத்தலாம்).Capture 259

Related posts

சாக்லெட் கப் கேக்

nathan

லவ் கேக்

nathan

பாதாம் கேக்

nathan

மேங்கோ கிரீம் சீஸ் புட்டிங்

nathan

ஸ்ட்ராபெர்ரி ஷார்ட் க்ரஸ்ட்

nathan

கப் கேக் செய்வது எப்படி ?

nathan

வாழைப்பழ பான் கேக்

nathan

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ்க்கான ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் வீட்டிலேயே தயாரிக்கலாம்

nathan

(முட்டை சேர்க்காத‌) வெனிலா கேக்

nathan