31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
அசைவ வகைகள்அறுசுவை

இறால் தொக்கு

தேவையான பொருட்கள்:

  • இறால் -200 கிராம்
  • பெரிய வெங்காயம் -1
  • தக்காளி -1
  • பச்சை மிளகாய் -2
  • இஞ்சி ,பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
  • மிளகாய் தூள் -1 1/2 டேபிள்ஸ்பூன்
  • மல்லித் தூள் -2 டேபிள்ஸ்பூன்
  • கொத்தமல்லி தலை -சிறிது அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி ,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும்.

வதக்கிய பின்பு அடுப்பை மிதமான  சூட்டில் வைத்த பின்பு கடவை தட்டு போட்டு மூடி இரண்டு நிமிடம் வேக விடவும்.பின்பு தட்டை எடுத்துவிட்டு அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,மல்லி தூள் ,இறால் மற்றும் உப்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

வதக்கிய பின்பு அதில் ஒரு குழி கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு மூடியை போட்டு மூடி எண்ணெய் சுண்டி வரும் வரை வேக விட்டு இறக்கவும் .இப்போது இறால் தொக்கு ரெடி.

Related posts

மத்தி மீன் வறுவல்

nathan

சுவையான நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி

nathan

சுவையான இறால் புளிக்குழம்பு

nathan

நண்டு ஃப்ரை

nathan

பேச்சுலர்களுக்கான… உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு

nathan

சன்டே ஸ்பெஷல் பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி

nathan

கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி

nathan

ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட்

nathan

சைனீஸ் இறால் நூடுல்ஸ்

nathan