24 C
Chennai
Thursday, Dec 19, 2024
cover 1
சமையல் குறிப்புகள்

பேக்கிங் பவுடர் – பேக்கிங் சோடா ரெண்டையும் எப்படி கண்டுபிடிக்கிறது…தெரிஞ்சிக்கங்க…

பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடரும் ஒன்று தான் என பலர் குழம்பிவிடுகின்றனர். இரண்டிற்கும் ஒரே மாதிரியான பெயர், வடிவம், பயன்பாடு உள்ளதால் ஏற்படும் குழப்பம் இது.

ஆனால் மாற்றி பயன்படுத்தி சொதப்பாமல் இருக்க இவற்றை பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பேங்கிங் சோடா

சூசன் ரீட் எனப்படும் பிரபல சமையல் கலைஞர் இரண்டிற்குமான வேறுபாட்டை விவரிக்கிறார். பேக்கிங் சோடா என்பது மினரல் எனப்படும் தாதுப்பொருள். அவை அமிலத்தன்மை உடைய பொருளுடன் இணையும் போது கார்பன் டைஆக்சைடு (கரி அமில வாயு) உருவாகிறது. பொதுவாக நீரில் கலக்கும் போது வரும் குமிழிகள் கரியமில வாயு வெளியேறுவதால் தான். இவை சுத்தப்படுத்த, கறைகளை அகற்ற பெரும் துணை புரியக்கூடியவை.

சமையலுக்கு

பொதுவாக மாவை புளிக்க வைக்க மொளாசஸ், மேப்பிள் சிரப், எலுமிச்சை சாறு, பூசணிக்காய் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பொரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உணவுகள் மொறு மொறுப்பாக வர பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது. கேக் தயாரிப்பில் பேக்கிங் சோடா முக்கிய இடம் பெறுகிறது. பேங்கிங் சோடா சமையலில் பயன்படுத்தினால் சற்று உவர்ப்பு, புளிப்பு கலந்த சுவை ஏற்படுகிறது.

சுத்தப்படுத்த

சுத்தப்படுத்த பேக்கிங் சோடாவை எதில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தரையில் உள்ள கரையில் இருந்து பாத்திரங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தலாம். பேங்கிங் சோடா என்பது சாதாரண கல்லை பொடியாக்கி செய்வது தான்.

பேக்கிங் பவுடர்:

பேக்கிங் பவுடர் என்பது பேக்கிங் சோடாவில் மேலும் ஒரு அமிலத்தன்மை உடைய பொருளைக் கலந்து, அவை கரியமில வாயு வெளியிடாமல் இருக்க ஒரு தடுப்பை பயன்படுத்தி தயாரிக்கப்படுவது. பெரும்பாலும் சோள மாவு தான் தடுப்பு பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை நீராக எதுவும் சேர்க்காமல் இருக்கும் வரை கரியமில வாயுவை வெளியிடுவதில்லை.

பிஸ்கட் தயாரிப்பு

பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகள் தயாரிப்பில் மிக முக்கிய இடத்தை பேக்கிங் சோடாவும் பேக்கங் பவுடரும் தான் பெற்றிருக்கின்றன. இவற்றை பயன்படுத்தாமல் செய்தால் பார்க்கவே பரிதாபமாக இருக்கும் என்று கிண்டலாக சமையல் கலை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மிதமான வெப்பநிலை

இந்த பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா, வெளியில் வைத்தாலோ அல்லது சூடான இடத்தில் வைத்தாலோ அது தன் தன்மையை இழந்துவிடும். மேலும் ஈரப்பதம் அதிகம் இருக்கும் இடத்தில் வைத்தால் அமிலத்தன்மை அதிகரித்து கரியமில வாயு வெளியாகி அப்போதும் அது தன் தன்மையை இழந்துவிடும்.

வேறு பெயர்கள்

பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகிய இரண்டிற்கும் வேறு பெயர்களும் உள்ளது. ஒன்று நீரில் கலந்தவுடன் அமில செயல்பாடு தொடங்கும் வகை என்பதால் சிங்கிள் ஆக்டிங் பேக்கிங் சோடா. மற்றொன்று நீரில் கலந்து, சூடாக்கும் போது அமில செயல்பாடு தொடங்கும் டபுள் ஆக்டிங் பேகிங் பவுடர்.

எப்படி கண்டுபிடிப்பது?

இதனை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ரீட் ஒரு யோசனை சொல்கிறார். பேகிங் சோடா என்றால், சிங்கிள் ஆக்டிங். அதாவது தண்ணீரில் கலந்தவுடன் குமிழிகள் நுரை வருவது. பேங்கிங் பவுடர் என்றால் சூடாக்கியவுடன் புசுபுசுவென பொங்குவது. இந்த இரண்டு வித்தியாசங்களையும் வைத்து, பேக்கிங் பவுடருக்கும் பேக்கங் சோடாவுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடித்து விடலாம்.

Related posts

பாலுடன் இந்த இரண்டு பொருளை கலந்து குடித்தால் போதும்! சூப்பர் டிப்ஸ்

nathan

சுவையான காளான் குருமா

nathan

KONDAKKADALAI SUNDAL/ கொண்டைக்கடலை சுண்டல்

nathan

சூப்பரான கரும்புச்சாறு பொங்கல்!….

sangika

சுவையான பட்டர் குல்ச்சா

nathan

சுவை மிகுந்த பன்னீர் ஒம்லட்!

nathan

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் அண்ட் சால்ட் பிஸ்கட்!…

sangika

சுவையான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்

nathan

இஞ்சி குழம்பு

nathan