26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
07 1 stayingalone
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தனிமையில் வசிப்பவர்களுக்கான டாப் 10 யோசனைகள்!!!

தனிமையில் வாழ்வது என்பது சற்றே பயப்படுத்துவதாக இருக்கும் – அதுவும் முதல் முறையாக என்றால் பயத்தின் அளவை சொல்ல வேண்யடிதே இல்லை! பலரும் நினைப்பது போல் தனிமையில் வசிப்பதென்பது எளிதானதோ அல்லது விரும்பக் கூடியதோ கிடையாது, இது உண்மையில் முள்படுக்கை போன்றது தான். பிறந்தது முதல் பெற்றோருடன் வளர்ந்து விட்டு, இப்பொழுது தனியே வெளியேறி வருவது நல்லதாகவும், ஆச்சரியமூட்டுவதாகவும் இருந்தாலும் நீங்கள் தனிமையை அனுபவிக்கும் போது தான் அதன் மறுமுகம் உங்களுக்குத் தெரியும்.

ஒவ்வொருவரும் சுதந்திரமாக இருக்க ஏங்குவார்கள் மற்றும் அவர்கள் அந்த சுதந்திரத்தை அடைந்து தனிமையில் வாழும் போது இதயம் நிறைந்திருப்பதையும் உணருவார்கள், ஆனால் சிறிது காலத்திற்குப் பின்னர் இது சுதந்திரம் அல்ல, தனிமை என்று உணர்ந்து – அது ஆர்வமூட்டுவதாகவோ மற்றும் அற்புதமானதாகவோ இருப்பதில்லை என அறிவார்கள். தனிமையில் வாழும் பெண்கள் தங்களுடைய தினசரி வாழ்க்கையில் பாதுகாப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். பெண்களைப் பொறுத்த வரையில் அவர்களைப் பாதுகாத்துக் கொள்வதே தலையாய முக்கியத்துவம் பெற்ற விஷயமாகும். நீங்களே சமைத்து, துவைத்து, வீட்டை சுத்தம் செய்து வாழும் தனிமையான வாழ்க்கை சோர்வூட்டுவதாகவும் மற்றும் ஊக்கமற்றதாகவும் உங்களுக்குத் தோன்றும்.

வெளிப்புற பாதுகாப்பு

நீங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலோ அல்லது வீட்டிலோ தனிமையில் வசித்து வந்தால் வெளிப்புறத்தில் பாதூகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறு தனிமையில் வசிப்பவர்கள் செய்ய வேண்டிய மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சம் அலாரம்களை நிறுவி வைப்பது தான். உங்களிடம் அலாரம் இருந்தால் அருகில் வசிப்பவர்கள் உங்களுக்கான எமெர்ஜென்ஸி சூழல்களை உடனடியாக அறிந்து கொள்வார்கள்.

ஊடுருவல் பேர்வழிகளை தடுக்க தேவை பூட்டு

நீங்கள் தனிமையில் வசிக்கும் போது, ஊடுருவல் பேர்வழிகளிடம் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், வீட்டின் கதவுகளை பெரும்பாலும் மூடி வைப்பது நலம்.

அலங்காரம்

நீங்கள் தனிமையில் இருக்கும் போது, அந்த தனிமையை வெற்றி கொள்ள உங்கள் வீட்டுக்கு விதவிதமான அலங்காரங்களை செய்யலாம். இது ஒரு மிகச்சிறந்த மற்றும் அழகிய பொழுதுபோக்காக இருக்கும். உதாரணமாக, உங்கள் வீட்டு சமையலறை பளபளக்க விரும்பினால் ஒரு நல்ல டைனிங் டேபிள் மற்றும் ரெப்ரிஜிரேட்டரை வாங்கி வையுங்கள். மேலும் உங்கள் நண்பர்களை விருந்துக்கு அழைத்தால், நான்-ஸ்டிக் பான்கள் மற்றும் பாத்திரங்களை வாங்கி வைத்திருங்கள். நீங்கள் தனிமையில் வசிக்கும் போது உங்கள் வீட்டு ஹாலை ஒழுங்காக பராமரித்து வருவதும், பர்னிச்சர்களை அழகாக துடைத்து வைப்பதும் மிகவும் பயன்படக் கூடிய குறிப்புகளாகும். விரிப்புகள், நல்ல குஷன்கள் மற்றும் மேஜை விளக்குகளை வாங்கி வைத்தால் வீட ‘வெல்கம்’ என்று உங்களை வரவேற்கும்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளுதல்

நீங்கள் தனிமையில் பாதுகாப்பாக வசிக்க விரும்பினால் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் மற்றும் தினசரி உங்களுடைய நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தெரியும் வகையில் வைத்திருங்கள். இவ்வாறு இருக்கும் போது, திடீரென ஒருநாள் உங்களிடம் இருந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தொடர்பு இல்லாமல் போனால், அவர்கள் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள்.

வெளியிடங்களுக்கு சென்று வாருங்கள்

உங்களுடைய குடும்பத்தினர் அருகில் வசிக்காமலும் ஆனால் வேறு வேறு இடங்களிலும் வசிக்கிறார்கள் என்ற நிலை இருந்தால், அவ்வவ்போது குடும்பத்தினர் அனைவரும் ஒரே இட்தில் ஒன்று கூடி இருக்கும் நிகழ்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு நடக்கும் பொது ஒவ்வொருவரும் ஊர் சுற்றிப் பார்க்கவும், ஒரு வாரமாவது ஒன்றாக இருக்கவும் முடியும்.

சமூக வலைத்தளங்களை கவனிக்கவும்

தனிமையில் வசிப்பவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான பாதுகாப்பு டிப்ஸ் – நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்யாமல் இருப்பது தான். இவ்வாறு நீங்கள் செய்யும் போது, உங்களுடைய தினசரி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அதிகளவில் வெளியே தெரியச் செய்கிறீர்கள். அதாவது உங்கள் வீட் எப்பொழுது காலியாக இருக்கும் மற்றும் எப்பொழுது நீங்கள் தனிமையில் இருப்பீர்கள் போன்ற தகவல்களை உங்களையறியாமல் மற்றவர்களுக்கு கொடுத்து விடுகிறீர்கள்.

அக்கம் பக்கம் பாரடா!

தனிமையில் வசித்து வரும் உங்களுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சென்று தானாகவே அறிமுகம் செய்து கொள்வதிலோ, அவர்களிடம் பழகுவதிலோ எந்தவிதமான சங்கோஜமும் இருக்கக் கூடாது. நீங்கள் இவ்வாறு அவர்களிடம் பழகி வந்தால், உங்கள் பகுதியில் யாராவது ஊடுருவியுள்ளார்களா என்பதை எளிதில் கேட்டறிய முடியும். தேவையில்லாம் மற்றவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் எண்ணம் கொண்ட சக வீட்டு உரிiiயாளர் கூட இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவியாக இருப்பார். இவர்கள் மூலம் புதிய நபர்கள் யாராவது தென்பட்டார்களா அல்லது ஆபத்து எதுவும் உண்டா என்பது போன்ற விஷயங்கள் தெரிய வரும்!

இன்டர்நெட் அல்லது ஸ்மார்ட் போன்கள்

அலாரம் தயாரிக்கும் நிறுவனங்களில் சில இன்டர்நெட் மற்றும் மொபைல் போன்கள் வழியாக ஊடுருவல்களை கண்டறியும் வசதிகளை அளித்து வருகின்றன. நீங்கள் தனிமையில் வசித்து வந்தால் உங்கள் வாழ்க்கையுடன் இணைத்துக் கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறிப்புகளில் இது முக்கியமான ஒன்றாகும்.

வெளியே சாப்பிடுதல்

வீட்டுக்குள் தனியாக சாப்பிடும் போது பெண்களுக்கு பயமாக இருப்பது போன்ற எண்ணங்கள் தோன்றும், ஆனால் வெளியே சென்று சாப்பிடும் போது இந்த பயங்கள் இருப்பதில்லை. எனவே அவ்வப்போது வெளியிலுள்ள உணவகங்களுக்குச் சென்று உங்களுக்காக நல்ல சாப்பாட்டை சாப்பிட மறந்து விட வேண்டாம்.

மற்றொரு சாவி

உங்கள் வீட்டுக்கான மற்றொரு சாவி யார் யாரிடம் உள்ளது என்ற லிஸ்ட் எப்பொழுதும் உங்களிடம் இருக்க வேண்டும். துனிமையில் வசிப்பவர்கள் இந்த மாதிரியான உபரி சாவிகளை மற்றவர்களுக்குத் தெரியும் இடங்களாக டோர்மேட் போன்ற இடங்களில் கண்டிப்பாக மறைத்து வைக்கக் கூடாது. அதே போலவே, யாராவது கததைவத் தட்டினால் யார் என்று கேட்டு குரலை அடையாளம் தெரிந்து கொள்ளாமலோ அல்லது கதவிலுள்ள கண்ணாடி வழியாக யார் திறக்கச் சொல்லுகிறார்கள் என்று பார்க்காமலோ கதவை திறக்க வேண்டாம்.

Related posts

Daily சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

nathan

கர்ப்பமாக இருக்கும் போது உடலை சரியாக கவனிக்கவில்லை என்றால் இப்படித்தான்! தெரிஞ்சிக்கங்க…

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகள், காய்கறி எனக்கு வேண்டவே வேண்டாம்!’ சொல்வதற்கான காரணம்…!-

nathan

உடல் சூட்டை குறைக்கும் மல்லிகைப் பூ எண்ணெய்

nathan

காதல்னு சொன்னாலே தலைதெறிக்க ஓடும் ராசிகள் என்னென்ன தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…பெண்கள் தயக்கத்தை தவிர்க்கும் வழிகள்

nathan

உங்க குழந்தைக்கு நீங்களே தாலாட்டு பாடுங்க! இதோ முத்தான பாடல்கள்!

nathan

கையெழுத்து சொல்லும் ரகசியம்

nathan

உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan