தேவையான பொருட்கள்:
காய்ந்த திராட்சை – 11/2 கப்
ஆரஞ்சு பழத்தோல் துண்டுகள் – 1/2 கப்
பேரீச்சம் பழம் – 11/2 கப்
ஜாதிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
வென்னிலா எஸ்சென்ஸ் – 10 சொட்டுகள்
வெண்ணெய் – 1 கப்
சர்க்கரை – 11/2 கப்
முட்டை – 4
மைதா – 3/4 கப்
தேன் – 1/2 கப்
செய்முறை:
பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முந்திரிப்பருப்பை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ள வேண்டும்.
முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் வெவ்வேறாக அடித்து வைத்து கொள்ளவும். சர்க்கரையையும், வெண்ணெயையும் நன்கு கடைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக பேக்கிங் பவுடர் கலந்து 5 முறை சலித்து வைத்திருக்கும் மாவையும், அடித்த மஞ்சள் கருவையும் மாறி மாறி சேர்த்துக் கலக்கவும்.
மாவு கலந்த பிறகு அதிகமாக கடைய கூடாது. மெதுவாக கரண்டியினால் கலக்க வேண்டும். பழங்களை முதலில் சிறிதளவு மாவில் தேய்த்து வைத்திருக்க வேண்டும். அவற்றை எசன்ஸ், ஜாதிக்காய் பொடியையும் கலந்து வெண்ணெய் தடவிய டின்களில் பேக்கிங் செய்யவும்.