26.9 C
Chennai
Tuesday, Nov 5, 2024
patham ab s7jmk
ஆரோக்கிய உணவு

பாதம் பருப்பை விட இந்த பருப்பிற்கு இப்படி ஒரு சக்தியா..?

பாதம் பருப்பை போன்று பிஸ்தா பருப்பை அனைவரும் அறிவோம். இந்த பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூலமாக உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்டுவதுடன், உடலில் இருக்கும் பல விதமான நோய்களை குணப்படுத்தும் வல்லமையை கொண்டது. இந்த பிஸ்தா பருப்பில் இருக்கும் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் மூலமாக நமது உடல் நலமானது பாதுகாக்கப்படுகிறது.

பிஸ்தா பருப்பானது இரத்தத்தை சுத்திகரிக்கும் பிரதான வேலையை செய்கிறது. இதன் மூலமாக இரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து, இரத்தத்தை சுத்தப்படுத்திக்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. செல்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கி, உடலை பாதுகாப்புடன் வைத்து கொள்ள உதவுகிறது.

இந்த பருப்பில் இருக்கும் வைட்டமின் பி6 காரணமாக, இரத்த வெள்ளையணுக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது. இரத்தத்தில் இருக்கும் வெள்ளையணுக்கள் மற்றும் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, மண்ணீரல் மற்றும் நிணநீரை பராமரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நியாபக ஆற்றல் அதிகமாகிறது.

சூடான பாலில் தினமும் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டு வர நியாபக சக்தியானது வெகுவாக ஆத்திகரிக்கும். இதன் மூலமாக தோல் சம்பந்தப்பட்ட நோய்களானது வராமல் தடுக்கப்படுகிறது. இந்த பருப்பில் இருக்கும் வைட்டமின் ஈ மூலமாக புறஊதாக்கதிர்கள் மூலமாக தோல் நோய்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது.

பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள்., கண்புரை நோய்கள் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

மேலும், கண்ணிற்கு தெளிவான பார்வையானது உண்டாகிறது. இதய சம்பந்தப்பட்ட நோய்களின் அபாயத்தை குறைத்து., மாரைடப்பு ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், உடலின் கேட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளின் ஆற்றலை அதிகரிக்கும் வல்லமை கொண்டது.patham ab s7jmk

Related posts

நீர்மோர் (Buttermilk)

nathan

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சூப்பர் டிப்ஸ்…

nathan

சூப்பர் டிப்ஸ் ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து.

nathan

தெரிஞ்சிக்கங்க…எடையைக் குறைத்து அழகை உயர்த்தும் உன்னத வழிமுறைகள்!!!

nathan

சுவையான வேர்க்கடலை சட்னி

nathan

இலங்கை ஆப்பம் செய்யணுமா?

nathan

வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷம் கடுக்காய்!

nathan

ஒரு டீஸ்பூன் தேன் உருவாக்க, தேனீக்கள் படும் கஷ்டம் இவ்வளவா?!

nathan

பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா?

nathan