தற்போது பலாப்பழ சீசன் என்பதால் சற்று விலைக்குறைவில் கிடைக்கும். அதனால் பலரும் அடிக்கடி பலாப்பழத்தை வாங்கி சாப்பிடுவார்கள். பலாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன மற்றும் இது உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது.
பலாப்பழம் மட்டுமின்றி, அதன் காயையும் பலர் விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு பலாக்காய் எளிதில் கிடைக்கக்கூடியது. ஆனால் இந்த பலாப்பழம் மற்றும் பலாக்காயை சாப்பிட்ட பின்னர் ஒருசில உணவுகளை உட்கொள்ளக்கூடாது. ஒருவேளை சாப்பிட்டால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது பலாப்பழம் சாப்பிட்டதும் எந்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.
பால்
எப்போதும் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக்கூடாது. அதோடு பால் குடித்த பின்னரும் பலாப்பழம் சாப்பிடக்கூடாது. அப்படி செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கே ஆபத்தாகிவிடும். அதுவும் இப்படி செய்தால் படர்தாமரை, சிரங்கு, அரிப்பு, அரிக்கும் தோலழற்சி, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தேன்
பலாப்பழத்தை தேனில் நனைத்து சாப்பிட நினைத்தால், அதை உடனே கைவிடுங்கள். ஏனெனில் அவ்வாறு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுவும் பலாப்பழம் சாப்பிட்டதும் தேன் சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை இருமடங்கு அதிகரித்துவிடும்.
பப்பாளி
பப்பாளி பழத்தையும் பலாப்பழம் சாப்பிட்டதும் சாப்பிடக்கூடாது. பொதுவாக பலாப்பழம் சூடான பண்பைக் கொண்டது. பப்பாளியும் சூடான பண்பைக் கொண்டது. எனவே இப்படி சூடான பண்புகளைக் கொண்ட இரண்டு பழங்களை ஒன்றாகவோ அல்லது அடுத்தடுத்தோ சாப்பிடக்கூடாது.
வெற்றிலை
மதிய உணவு உண்ட பின்னர் பலருக்கும் வெற்றிலை போடும் பழக்கம் இருக்கும். ஆனால் பலாக்காயை சமைத்து சாப்பிட்ட பின்னர் அல்லது பலாப்பழத்தை சாப்பிட்ட பின்னர் வெற்றிலை சாப்பிட்டால், அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.
வெண்டைக்காய்
பலாப்பழம் மற்றும் வெண்டைக்காயை ஒருபோதும் அடுத்தடுத்து சாப்பிடாதீர்கள். ஏனெனில் இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால், அது தோல் தொடர்பான பிரச்சனைகள், சருமத்தில் வெள்ளைப்புள்ளிகள் மற்றும் பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.