எப்படிச் செய்வது?
சூடான நீரில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும். தண்ணீருடன் 2 கப் தயிர் கலந்து வைக்கவும். மைதா, கடலைப்பருப்பு, ஈஸ்ட் கலவையை, வறுத்த சீரகம், உப்பு, நெய் சேர்த்து, ஒரு ஆழமான பாத்திரத்தில் சேர்த்து தனியாக வைக்கவும். பிசைந்த மாவை 20 நிமிடங்கள் மெல்லிய துணியால் மூடி வைக்கவும். 20 நிமிடங்களுக்கு பிறகு அது நன்கு உப்பி இருக்கும். சிறிய சம பந்துகளாக மாவை பிரித்து அதை சப்பாத்தி போல் தேய்த்து நடுவில் பனீர் கலவை வைத்து மூடி மறுபடியும் சப்பாத்தி போல் தேய்த்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கங்களிலும் பொன்னிறமாகும் வரை வைத்துப் பின் பரிமாறவும்.