நெற்றியில் கொப்புளங்கள் வந்தால் சீரகம் மற்றும் தேங்காயை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து போடவும். மேலும், வேப்பம் துளிர் உடன் மஞ்சள் அரைத்து அதனை முகத்தில் உள்ள கருமை நீங்கும்.
இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் நேரத்திர்க்கு சாப்பிட வேண்டும். எண்ணெய்யில் பொறித்த உணவுகளை தவிற்க்கவும். பச்சைகாய், பழம் அதிகம் சப்பிடவும்.
நெற்றியில் கொப்புளங்கள் வந்த இடங்களில் கற்றாழை சாரு பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கொப்புளங்கள் வந்த இடங்களில் குப்பைமேனி தழை சிறிதளவு, மஞ்சள், வேப்பங்கொழுந்து சேர்த்து அரைத்து பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வரும் பழக்கத்தை கபாடிபிடித்து வந்தால் நிச்சயமாக குணமடையும்.
கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் எலுமிச்சை சாறு கலந்து பூசி வந்தால் விரைவில் குணமாகும்.கடையில் உள்ளஎண்ணை தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
முருங்கை இலையை நன்றாக அரைத்து கொப்புளங்கள் உள்ள இடங்களில் பற்றுபோடவும். பிறகு ஒருமணிநேரம் கழித்து கழுவ வேண்டும். இதேபோல வாரம் இருமுறை செய்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
நல்ல எண்ணையை தினம் ஒரு முறை முகத்தில் தடவி 30 நிமிடம் நேரம் கழித்து சுடு தண்ணீரால் கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சோற்றுக்கற்றாழையை தினமும் நொங்கு போல் எடுத்து நெற்றியில் தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதனை 10 நாட்களுக்கு முயற்சி செய்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.