3 diabetics
ஆரோக்கிய உணவு

நீரிழிவு நோயாளிகளுக்கு தாறுமாறான நன்மைகளை அளிக்கும் ஒரே ஒரு குழம்பு

நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித்தரும் முருங்கை கீரையில் எப்படி சுவையான குழம்பு வைக்கலாம் என்று பார்ப்போம்.

கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வந்தாலும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தெரிவு செய்து உண்பது அவசிமான ஒன்றாக உள்ளது.

அந்த வகையில் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித்தரும் முருங்கை கீரையில் எப்படி சுவையான குழம்பு வைக்கலாம் என்று இன்று பார்க்கலாம்.

முருங்கைக் கீரை குழம்பு
முதலில் 2 கைப்பிடி முருங்கைக் கீரையை எடுத்து நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு அலசி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு, 50 கிராம் துவரம்பருப்பை குக்கரில் இட்டு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாக குழைய வேக வைத்து, பின் தனியாக எடுத்துவைக்கவும்.

இதற்கிடையில், ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும், அதில் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி காய்ந்தவுடன், 1/2 ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சீரகம், 3 சிவப்பு மிளகாய், 15 பூண்டு, 10 சின்ன வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

தொடர்ந்து நறுக்கிய 2 தக்காளி, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் குழம்பு மிளகாய் தூள் அல்லது சாம்பார் தூள் 1 ஸ்பூன் சேர்த்து மீண்டும் வதக்கி கொள்ளவும்.

இதன்பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு, முன்னர் வேகவைத்த பருப்பை சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ளவும். தொடர்ந்து முன்பு அலசி தயாராக வைத்திருக்கும் முருங்கைக் கீரையையும் சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளவும்.

இவை இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக கொதித்து வந்தவுடன் சிறிய துண்டு புளியை சேர்க்கவும். அவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும்.

இவையனைத்தும் நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த முருங்கைக்கீரை குழம்பு தயராக இருக்கும்.

Related posts

கருப்பை புற்று நோய்க்கான டயட்

nathan

தெரிந்து கொள்ளுங்கள்!அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்பை ஏற்படுத்துமா…?

nathan

செராமிக் பாத்திரத்தில் சமைப்பது ஆபத்தானதா?

nathan

தேங்காய் பால் சூப்!

nathan

உங்களுக்கு இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சா, இனிமேல் நீங்க வெள்ளை சர்க்கரை யூஸ் பண்ணவே மாட்டீங்க!

nathan

பூண்டு பால்

nathan

பூண்டு, வெங்காயம் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

பாலில் இந்த அதிசய பொருளை சேர்த்து குடித்தாலே போதும்! சக்தி பலமடங்கு அதிகரிக்கும்

nathan

உங்களுக்கு தெரியுமா பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள்!

nathan