நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது என்பதால், ஆரஞ்சு பழரசத்தை பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் ஆரஞ்சு பழரசம் அருந்தும் பெண்களுக்கு, டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியம், 18 சதவிகிதம் அதிகம் என்கிறது, ஒரு மருத்துவ ஆய்வு.
இது, மொத்தம் 70 ஆயிரம் செவிலியர்களைக் கொண்டு மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில், இது ஆண்களுக்கும் பொருந்துமா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
பரம்பரை காரணமாக அல்லாமல், வேறு நோய்களால் இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு வருவதே டைப் 2 நீரிழிவு நோயாகும்.
ஆரஞ்சு பழரசத்தில் உள்ள இனிப்பானது திரவ வடிவில் உள்ளதால், அது வயிற்றில் மிக விரைவாக உறிஞ்சிகொள்ளப்படும் என்பதாலேயே, டைப் 2 நீரிழிவு பாதிப்பு ஏற்பட காரணமாகிறது என மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக, ‘டயபடிக் கேர்’ என்ற மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.