28.6 C
Chennai
Tuesday, Nov 5, 2024
26 1509021138 4
ஆரோக்கியம் குறிப்புகள்

நீங்கள் சாப்பிட்ட உடன் இந்த விஷயத்தை செய்யும் நபரா ?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

செரிமானம் என்பது நமது உடலில் முறையாக நடக்க வேண்டிய ஒரு விஷயமாகும். இந்த செரிமானமானது நாம் உணவை சாப்பிட்ட பிறகு நடக்கும் ஒரு நிகழ்ச்சி என நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அவ்வாறு இல்லை. செரிமானம் என்பது ஒரு உணவை பார்த்த உடனேயே அல்லது நினைக்கும் போதே நமது நாவில் சுரக்கும் எச்சில் தான் செரிமானத்திற்கான முதல் படியாகும். எனவே இந்த செரிமானமானது நாம் சாப்பிடுவதற்கு முன் பின் நடக்கும் சில விஷயங்களை பொருத்தும் அமையும் என்பதால் நாம் சாப்பிடுவதற்கு முன்னர் என்ன செய்கிறோம், பின்னர் என்ன செய்கிறோம் என்ற விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

பழங்கள்
பழங்கள் வயிற்றில் வாயுவை உருவாக்கி வயிற்றை நிரப்பி விடும். இதனால் தான் சாப்பிட்டதற்கு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது சாப்பிடுவதற்கு ஒருமணி நேரம் முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

தேநீர் தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும். இதனால் சாப்பிட்ட உடன் ஒரு டீ சாப்பிடலாமே என்று டீ குடித்து விடாதீர்கள்.

புகைப்பிடித்தல் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.. உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. எனவே சாப்பிட்டதற்கு பிறகு உடனடியாக சிகரெட் பிடிக்காதீர்கள்.

இது வேண்டாம்! சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள ஆடை அல்லது பெல்ட் போன்றவற்றை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியான படி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும். எனவே இனி இதனை செய்ய வேண்டாம்.

குளித்தல் சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது. சாப்பிடும் முன்னர் குளிப்பது சிறந்ததே…!

நடப்பது சாப்பிட்ட உடன் உணவு செரிக்க சிறிது நேரம் நடக்கலாம் என்று பலரும் நினைப்பார்கள்.. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

தூங்குவது சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

தண்ணீர் குடித்தல் வயிற்றின் அமிலத்தன்மையானது ஒன்றரையிலிருந்து மூன்று பி.ஹெச்(Ph) வரை இருக்கும். இந்த அளவில்தான் உணவானது அமிலத்துடன் சேர்ந்து நன்றாகச் செரிக்கப்படும். ஆனால், சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால், வயிற்றில் செரிமானத்துக்குத் தயாராக இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நீர்க்கச் செய்துவிடும். இதனால், வயிற்றில் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும்போது, விக்கலோ அடைப்போ ஏற்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு, வெந்நீர் குடிப்பது சிறந்தது.

Related posts

தெரிஞ்சிக்கங்க…பெண்களிடத்தில் ஆண்கள் ரசிக்கும் அந்த 6 விடயமும் இது தானாம்!!

nathan

வெயிலைக்கூட சமாளிக்க இந்த இலை ஒன்றே போதும்……

sangika

தெரிஞ்சிக்கங்க…காதலிக்கும் பெண்களை கண்டுபிடிக்க பத்து வழிகள்!

nathan

முதுமையும் மன ஆரோக்கியமும்

nathan

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் டைகர் நட்ஸ் பற்றி தெரியுமா ?

nathan

முடக்கத்தான் கீரையில் இவ்வளவு மருத்துவ குணங்களா? தெரிஞ்சிக்கங்க…

nathan

ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா 50க்கும் மேற்பட்ட நோய்களை விரட்டியடிக்கும் சின்ன வெங்காயம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரவில் படுக்கும் முன் இதை செய்தால் கூந்தல், சருமம் பாதிக்கும்

nathan