24.9 C
Chennai
Tuesday, Dec 17, 2024
67
ஆரோக்கிய உணவு

நீங்கள் காய்கறிகளை சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? அப்ப இத படிங்க!

நாம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகள் பெரும்பாலும் விஷத்தன்மையோடுதான் விற்பனைக்கு வருகின்றன. காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், அவைகளின் விளைச்சலுக்காகவும் அவைகளை பூச்சிகள், வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. நாமும் விஷ கலப்போடுதான் அவைகளை வாங்கி வருகிறோம்.

இந்த மாதிரி உள்ள காய்கறிகளை அப்படியே சமைத்து சாப்பிட்டால் விஷத்தின் தாக்குதல் ஏற்பட்டு, பல்வேறு நோய்கள் தோன்றும். அந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் அந்த காய்கறிகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்று பார்ப்போம்.

* கொத்தமல்லி தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுங்கள். அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திரத்தில் கொட்டி பிரிட்ஜில் வைக்கலாம்.

* முருங்கைகாய், பீட்ரூட், கேரட் போன்றவைகளை பலமுறை தண்ணீரில் கழுவுங்கள். பின்பு தண்ணீரை துடைத்துவிட்டு, காட்டன் துணியை சுற்றி பிரிட்ஜில் வையுங்கள். உபயோகிப்பதற்கு முன்பு அவைகளை வெளியே எடுத்து, மேல் தோலை லேசாக சுரண்டி எடுத்துவிட்டு நன்றாக கழுவி பயன்படுத்துங்கள்.

* வெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாவக்காய், சுரைக்காய் போன்றவைகளை துணிதுவைக்க பயன்படுத்தும் மென்மையான பிரஷ் மூலம் லேசாக உரசி தண்ணீரில் கழுவுங்கள். சில தடவை தண்ணீரில் அலசிவிட்டு, வினிகர் அல்லது புளி திரவத்தில் பத்து நிமிடங்கள் முக்கிவைத்துவிட்டு பின்பு கழுவி, துடைத்து பயன்படுத்துங்கள்.

* காலிபிளவரில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாக பெயர்த்து எடுங்கள். அவைகளை வினிகர் அல்லது உப்பு திரவத்தில் பத்து நிமிடம் முக்கிவைத்துவிட்டு பின்பு பலமுறை கழுவி பயன்படுத்தவேண்டும்.

* மிளகாய், குடை மிளகாய், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் போன்றவைகளை மேற்கண்ட கலவையில் ஏதாவது ஒன்றில் பத்து நிமிடங்கள் முக்கி வைத்திருங்கள். பின்பு பலமுறை கழுவி, இரவு முழுவதும் தண்ணீர் வடியும் பாத்திரத்தில் வையுங்கள். பின்பு அதில் இருக்கும் தண்ணீரை துணியால் துடைத்துவிட்டு பயன்படுத்துங்கள்.67

Related posts

அழகான சமையலறைக்கு….

nathan

தினமும் உணவில் பெருங்காயம் சேர்த்துக்கோங்க

nathan

உங்களுக்கு தெரியுமா உணவிற்கு முன் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பானிபூரி சாப்பிடலாமா?

nathan

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கறிவேப்பிலை

nathan

உங்களுக்கு தெரியுமா பலாப்பழ விதைகளை எடுத்து கொள்வதால் உடலில் ஏற்படும் ஆச்சரிய நன்மைகள்..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நூறு மருத்துவர்களுக்கு சமமான இஞ்சி… எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தலாம்?

nathan

சர்க்கரை நோயே வராது!மரத்தில் காய்க்கும் சுகர் மாத்திரை!

nathan

இதை மட்டும் இரவில் சாப்பிடுங்க…! : உடல் எடை அதுவாக குறையும்

nathan