கொழுப்புக்களானது உடலில் வயிற்றிக்கு அடுத்தப்படியாக தொடையில் சேரும். தொடையில் சேரும் கொழுப்புக்களை கரைப்பதற்கு ஒருசில யோகா நிலைகள் உதவும். அந்த யோகாக்களை தினமும் தவறாமல் செய்து வந்தால், தொடையை சிக்கென்று அழகாக வைத்துக் கொள்ள முடியும்.
* சக்கராசனம் தொடையில் உள்ள கொழுப்புக்களை மட்டுமின்றி, வயிற்றில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களையும் கரைக்கும். இந்த ஆசனம் செய்ய, முதலில் தரையில் படுத்து கால்களை பிட்டத்திற்கு அருகே இருக்குமாறு மடக்கி, கைகளை தலைக்கு பின்புறம் ஊன்றி, உடலை மேலே தூக்க வேண்டும். இப்படி 30 நொடிகள் முதல் 1 நிமிடம் வரை இருக்க வேண்டும். முக்கியமாக இந்நிலையை தினமும் 5 முறை செய்து வர வேண்டும்.
* புஜங்காசனம் செய்ய, தரையில் குப்புற படுத்து, கைகளை மார்பு பகுதிக்கு பக்கவாட்டில் ஊன்றி, தலை மற்றும் மார்பு பகுதியை மேல் நோக்கித் தூக்க வேண்டும். இப்படி செய்வதனால் உங்கள் அடிவயிறு, தொடை போன்றவை ஃபிட்டாகும்.
* தனுராசனம் செய்வதற்கு குப்புறப்படுத்து, இரண்டு கைகளாலும் கணுக்காலைப் பின்புறமாக பிடித்து, உடலை வில் போன்று வளைக்க வேண்டும். இந்த ஆசனத்தை தினமும் செய்தால், தொப்பை குறைவதோடு, தொடையில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.
* மாலாசனத்திற்கு முதலில் கால்களை 12 இன்ச் அகலத்தில் விரித்து நேராக நின்று, பின் வணக்கம் கூறிய நிலையில் அமர வேண்டும். இப்படி 5 முறை செய்து வர, தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரையும். – இந்த 4 ஆசனங்களை தினமும் தவறாமல் செய்து வந்தால் உங்கள் தொடை பகுதியில் உள்ள அதிகப்படியான சதை படிப்படியாக குறைவதை காணலாம்.