33.4 C
Chennai
Monday, Oct 28, 2024
Tinea Alba
சரும பராமரிப்பு

தேமலை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளை வில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் தேமலை குணப்படுத்தும் மருத்துவம்குறித்து பார்க்கலாம். தேமல் பிரச்னைக்கு கல்யாண முருங்கை, வேப்பிலை, மாதுளை, வெங்காயம் ஆகியவை மருந்தாகிறது. அழகை கெடுக்க கூடிய தேமல் காரணமாக தோலில் அரிப்பு ஏற்படும். இதற்கான மருந்துகளை செய்முறையில் பார்க்கலாம்.

வேப்பிலையை பயன்படுத்தி தேமலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்:
வேப்பிலை
மஞ்சள் பொடி
கடுக்காய் பொடி.

செய்முறை:
வேப்பிலையை பசையாக அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி, கடுக்காய்பொடி சேர்க்கவும். இவைகளை நன்றாக கலந்து தேமல் இருக்கும் இடத்தில் பூசிவைத்து கழுவிவர தேமல் குணமாகும். எந்தவகையான தேமலாக இருந்தாலும் அதை ஆரம்ப நிலையில் தடுப்பது நல்லது. வேப்பிலை அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. அம்மை கண்டபோது, தொற்றுநோய்கள் வந்தபோது இல்லத்தின் முற்றத்தில் வேப்பிலையை வைப்பது வழக்கம். இது தொற்றுக் கிருமிகளை தடுக்க கூடியது.

மாதுளையை பயன்படுத்தி தேமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மாதுளை
பூண்டு
கடுக்காய் பொடி.
செய்முறை:
2 ஸ்பூன் மாதுளை சாறு, கால் ஸ்பூன் பூண்டு பசை, கால் ஸ்பூன் கடுக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து தேமல் இருக்கும் இடத்தில் அழுத்தி தேய்த்து சிறிது நேரத்துக்கு பின் கழுவிவர தேமல் வெகுவிரைவில் மறையும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பூண்டில் நோய் கிருமிகளை அகற்றும் வேதிப்பொருள் உள்ளது. மாதுளை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது. தோலுக்கு மென்மை கொடுக்க கூடியது. கல்யாண முருங்கையை பயன்படுத்தி தேமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
கல்யாண முருங்கை
உப்பு
வெங்காயம்.

செய்முறை:
கல்யாண முருங்கை இலை பசை, உப்பு, வெங்காய சாறு ஆகியவற்றை கலந்து தேமல் உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர வெகுவிரைவில் தேமல் மறையும்.

மருத்துவ குணங்களை கொண்ட கல்யாண முருங்கையில் முட்கள் இருக்கும். இது மூட்டு வலியை குணப்படுத்தும். சளியை போக்கும். வயிற்று கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது. கல்யாண முருங்கை சிவந்த நிறமுடைய பெரிய பூக்களை கொண்டது. கல்யாண முருங்கையை அரிசி மாவில் சேர்த்து அரைத்து தோசையாகவோ அல்லது அடையாகவோ சாப்பிடும்போது ரத்த ஓட்டம் சீராகும். சளி பிரச்னையை தீர்க்கும். வலியை போக்கும். பூஞ்சை காளான்களை அழிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது.

வெங்காயம், மாதுளை, பூண்டு, வேப்பிலை ஆகியவை தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. இவைகளை பயன்படுத்துவதன் மூலம் தேமலை குணப்படுத்தலாம். சிரங்கை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். நகத்துக்கு அழகு சேர்க்க பயன்படுத்தும் மருதாணி, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட குப்பைமேனி ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து நகங்கள், விரல் இடுக்குகளில் போட்டுவர வெகு விரைவில் சிரங்கு, அரிப்பு பிரச்னை சரியாகும்.
Tinea Alba

Related posts

பணமே செலவழிக்காமல் அழகாக ஜொலிக்க கற்றாழை ஃபேஸ் பேக் போடுங்க

nathan

நமது முக அழகையும் இது பாதுகாக்க பெருஞ்சீரகம்!….

sangika

இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்புகள்

nathan

எளிய முறையில் சீரற்ற சருமத்தை மாற்றி அழகான பொலிவான சருமத்தைப் பெற இதனை செய்து வாருங்கள் 2 நாளில் மாற்றத்தை காணலாம்…..

sangika

தோலின் நிறமாற்றத்தை போக்க இயற்கை முறையில் கிடைக்கும் ஸ்கின்டேன்

nathan

உங்க கழுத்து கருப்பா இருக்கா? அதை நீக்க இதோ சில வழிகள்

nathan

வசிகரத்தை அள்ளித் தரவல்ல ஆரஞ்ச் பழங்களின் அழகு டிப்ஸ்

nathan

இயற்கை பொருட்களை கொண்டு சரும முடிகளை நீக்கும் வழிகள்

nathan

சருமத்திற்கு சன் ஸ்க்ரீன் அவசியமா?

nathan