26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
625.500.560.350.160.300.053.800.900
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…நோய்களை விரட்டியடிக்க நம் தமிழர்கள் பயன்படுத்த இந்த பொருளை பற்றி தெரியுமா?

உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக உடல், மனம், ஆன்மாவைத் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உள்ளது’ என்று கூறும் திருமூலர் அதை `அமுதம்’ என்று குறிப்பிடுகிறார்.

அதாவது, `தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்துக்கு ஒப்பானது’ என திருமூலர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ – கடுக்காய் நோய்

ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள்

ஊட்டி உடல் தேற்றும் உவந்து’

என்ற இன்னொரு மருத்துவப் பாடலும் கடுக்காயின் பெருமையைப் பறைசாற்றுகிறது.

கண்பார்வை கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள்,வாய்ப்புண், தொண்டை புண், இரைப்பை புண், குடற் புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைபடுதல்,

மூத்திர குழாய்களில் உண்டாகும் புண், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், பவுத்திர கட்டி, சர்க்கரை நோய், இதயநோய், மூட்டு வலி, உடல் பலகீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறு, ஆண்களின் உயிரணுக்களில் குறைபாடு போன்ற அனைத்திற்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

கடுக்காய் உங்கள் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். கடுக்காய் பொடி மலச் சிக்கலை போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் துாண்டும்.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வயிற்று மற்றும் குடல் புண்களை ஆற்றவும், வாய் துர்நாற்றம் போக்கவும் பெரிதும் உதவுகிறது. தினமும் இரவு துாங்க செல்வதற்கு முன் 1 ஸ்பூன் கடுக்காய் பொடி ஒரு தம்ளர் வெந்நீருடன் சேர்த்து குடித்துவர சர்வ நோய்களும் நிவாரணமாகும்.

கடுக்காயின் பயன்கள்

கடுக்காய் ரத்தத்தைத் தூய்மையாக்குகிறது. மலக் கட்டை நீக்கும். வயிற்றில் உள்ள உறுப்புகளை வலுப்படுத்தும். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தி, நினைவாற்றலைப் பெருக்க கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது

  • மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெற்று விடும்.
  • இரவில் படுக்கும்போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இலகிப் போகும். மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்று விடும்.
  • 15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடித்து வந்தால் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

Related posts

நீங்க ஒரு அப்பாவா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

சளியை விரட்டும் துளசி

nathan

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே மாத விடாய் ஏற்படுகின்றது. ஆலோசனை வழங்கவும்.

nathan

முதலுதவிகள்… முத்தான அறிவுரைகள்! ஒரு டஜன் யோசனைகள்!

nathan

ஜாக்கிரதையா இருங்க… உங்களுக்கு இப்படி அடிக்கடி வருதா?… அப்போ அந்த நோயா இருக்கலாம்…

nathan

முட்டுக்கட்டை போட்டும் தயக்கமும், பயமும்

nathan

குரங்கம்மை எப்படி பரவுகின்றது? அதன் அறிகுறிகள் என்ன?

nathan

பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்

nathan

ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கடுகு

nathan