21 6191ec
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…குளிர்காலத்தில் நீங்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

உடலுக்கு மிக முக்கிய தேவை உணவு. அதுவும் இந்த குளிர்காலங்களில் நாம் சரியான உணவுகளையே தெரிவு செய்து சாப்பிட வேண்டும்.

இந்த பருவத்தில் தான் பலவிதமான காய்கறிகள் மற்றும் பழங்கள் புதிதாகக் கிடைக்கும். அவற்றை சரியான அளவில் நாம் எடுத்துக்கொண்டால் நமக்கு நிறைய பயன்கள் கிடைக்கும்.

ஆம் இந்த குளிர்காலங்களில் நமக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பைரிடாக்சின் என அழைக்கப்படும் வைட்டமில் பி6 நிறைந்த பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.

ஏனெனில் இந்த காலக்கட்டங்களில் ஏற்படும் உடல் தொந்தரவு மட்டுமின்றி, மனநிலையை ஒழுங்கு படுத்தி மனச் சோர்வின் அறிகுறியை குறைக்கவும் இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகள் நமக்கு பெரிதும் பயன்படுகின்றது.

கேரட்
குளிர்காலத்தில் மிகவும் எளிதாக கிடைக்கும் கேரட் வைட்டமின் பி6 நிறைந்த காய்கறிகளில் முக்கியமானதாகும்.

ஒரு கேரட் ஒரு கிளாஸ் பாலைப் போலவே வைட்டமின் பி6 ஐ வழங்குவதுடன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்துக்களும் காணப்படுகின்றது.

 

பால்
அனைத்து வயதினருக்கும் பரிந்துரைக்கப்படும் உணவு பொருளான பாலில், வைட்டமின் பி6 அதிகமாகவே இருக்கின்றது.

வாழைப்பழம்
உடல் எடையை அதிகரிக்க விரும்புவர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும் வாழைப்பழத்தினை தினமும் சாப்பிடுவது நல்லது. இதிலும் வைட்டமின் பி6 மற்றும் நார்ச்சத்துக்களும் இருக்கின்றது.

கீரை
இரும்பு சத்து, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த கீரையும் இந்த குளிர்காலங்களில் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவாகும். தினசரி உணவில் சேர்ப்பதால் அதிக ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது.

 

கோழி கல்லீரல்
கோழி கல்லீரலிலும் வைட்டமின் பி6 தவிர, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதோடு, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.

முட்டை
தற்போது பெரும்பாலான நபர்களின் காலை உணவாக தெரிவு செய்யப்படும் முட்டை, குளிர்காலங்களில் நமது உடலை சூடாக வைத்துக்கொள்கின்றது. இதனை இந்த காலங்களில் ஆம்லெட்டாகவே அல்லது ஆப்பாயிலாகவோ, வேக வைத்தோ சாப்பிடலாம்.

பச்சை பட்டாணி
இந்த குளிர்கால மாதங்களில் பரவலாக கிடைக்கும் காய்களில் ஒன்றாக இருக்கும் பச்சை பட்டாணியில், பி6 வைட்டமின் அதிக அளவுடன் இருக்கின்றது. பச்சை பட்டாணியை சாலட்களில் அல்லது கேரட் அல்லது உருளைக்கிழங்குடன் வதக்கிய சைட் டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.

Related posts

நைட் தூங்க முடியாம கஷ்டப்படுறீங்களா?

nathan

அஸ்பாரகஸ் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா பீநட் பட்டரின் ஆரோகிய நன்மைகள்!

nathan

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் வாழைப்பூ துவையல்

nathan

சூப்பர் டிப்ஸ்! சர்க்கரைக்கு பதிலாக பேரிச்சை சிரப் பண்றதும் எளிது – பயன்களும் பல

nathan

சுடச் சுட வெங்காய சட்னி! இனி இப்படி செய்து ருசியுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…

nathan

சத்து நிறைந்த அவகோடா டோஸ்ட்

nathan

தர்பூசணி சாப்பிட்ட பிறகு நீங்க ஏன் தண்ணி குடிக்க கூடாது?

nathan