24.3 C
Chennai
Thursday, Dec 19, 2024
27 20 fren
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…எளிதில் செரிமானம் அடையாமல் தொந்தரவு கொடுக்கும் உணவுகள்!!!

இன்றைய காலத்தில் நோய்களின் தாக்கமானது அதிகம் இருப்பதால், அதனைத் தவிர்க்க பலர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். மேலும் உடல் பருமனாலும் பலர் அவஸ்தைப்படுகின்றனர். எனவே நீண்ட நாட்கள் நன்கு பிட்டாக வாழ்வதற்கு தினமும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதுடன், உடற்பயிற்சிகளையும் செய்து வருகின்றனர்.

இருப்பினும் நாம் நம் நாவின் சுவைக்காக கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை நம்மை மறந்து அவ்வப்போது உட்கொள்ள நேரிடுகிறது. அப்படி சாப்பிடும் சில உணவுகள் எளிதில் செரிமானமடையாமல், வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடுகிறது. இங்கு அப்படி சரியாக செரிமானமாகாமல், வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும் சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் அவற்றை அளவாக சாப்பிட்டு வாருங்கள்.

ஐஸ் க்ரீம்

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே ஐஸ் க்ரீமை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அத்தகைய ஐஸ் க்ரீம் கூட எளிதில் செரிமானமாகாமல், வயிற்றை உப்புசத்துடன் வைத்துக் கொள்ளும்.

பருப்பு வகைகள்

பருப்புக்களில் ஒரு வகையான சர்க்கரையானது உள்ளது. எனவே தான் பருப்பு சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைந்திருப்பது போல் உள்ளது. மேலும் இந்த மாதிரியான உணவுப் பொருளை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது.

காரமான உணவுகள்

காரமான உணவுகள் நாவிற்கு மிகவும் பிடித்தவையாக இருந்தாலும், அவற்றில் உள்ள காரமானது வயிற்றுச் சுவர்களை பாதித்து, வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

வறுத்த உணவுகள்

எண்ணெயில் போட்டு வறுத்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொண்டாலும், அவை எளிதில் செரிமானமடையாமல், தொந்தரவை ஏற்படுத்தும்.

சிட்ரஸ் பானங்கள்

சிட்ரிக் ஆசிட் உள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொண்டால், அவை இரைப்பைச் சுவர்களுக்கு எரிச்சலூட்டி, உணவுப் பொருட்கள் எளிதில் செரிமானமாகாதவாறு செய்துவிடும்.

மசித்த உருளைக்கிழங்கு

மசித்த உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகம் உள்ளதால், இதனை எடுத்துக் கொண்டாலும், எளிதில் செரிமானமடையாது.

பச்சை வெங்காயம்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது, உற்பத்தி செய்யப்படும் வாயுவானது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.

சாக்லெட்

சொன்னால் நம்பமாட்டீர்கள், சாக்லெட் கூட எளிதில் செரிமானமாகாத உணவுப் பொருட்களில் ஒன்று. அதனால் தான் பசியின் போது சாக்லெட் சாப்பிட்டால், வயிறு நிறைந்திருப்பது போல் உள்ளது.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவரில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் அவற்றில உள்ள ரஃபினோஸ் என்னும் சர்க்கரை, எளிதில் செரிமானமடையாமல் தடுக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் எத்தனை நன்மைகள் நிறைந்திருந்தாலும், இதில் உள்ள ஒரு கெடுதல் தான், இவை எளிதில் செரிமானம் அடையாது.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸிலும் ஒருவகையான செரிமானத்தைத் தடுக்கும் இனிப்பானது உள்ளது. அதனால் தான் முட்டைக்கோஸ் சாப்பிட்டால், வயிறு ஒருமாதிரி உப்புசத்துடன் உள்ளது.

பாஸ்தா

நிறைய பேருக்கு பாஸ்தா என்றால் மிகவும் விருப்பம். ஆனால் அந்த பாஸ்தாவும் எளிதில் செரிமானமடையாது.

கரையக்கூடிய நார்ச்சத்து

கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வதாலும், அவை வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

லாக்டோஸ்

பால் பொருட்களில் பலவற்றில் லாக்டோஸ் என்னும் பொருள் அதிகம் இருக்கும். இந்த லாக்டோஸ் இருந்தால், அவை எளிதில் செரிமானமாகாது.

சீஸ்

சீஸில் புரோட்டீன், கொழுப்பு மற்றும் லாக்டோஸ் அதிக அளவில் நிறைந்திருப்பதால், சீஸ் உள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், நீண்ட நேரம் வயிறு நிறைந்துள்ளது.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் புரோட்டீன் மற்றும் கொழுப்பு எண்ணற்ற அளவில் உள்ளதால், இவையும் எளிதில் செரிமானமடையாது.

பன்றி இறைச்சி

பன்றி இறைச்சியிலும் புரோட்டீன் மற்றும் கொழுப்பு வளமாக இருப்பதால், இவையும் சீக்கிரம் செரிமானமாகாமல், வயிற்றை உப்புசத்துடன் வைக்கிறது. குறிப்பாக இந்த உணவை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

வாத்துக்கறி

சிக்கனை விட வாத்துக்கறி மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் இது எளிதில் செரிமானமாகாது. ஏனெனில் இவற்றில் புரோட்டீன் அளவுக்கு அதிகமாக உள்ளது.

பால்

பாலில் புரோட்டீன், கொழுப்புக்கள் மற்றும் லாக்டோஸ் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொண்டாலும், அவை எளிதில் செரிமானமாகாது.

பிரெஞ்சு பிரைஸ்

பெரும்பாலான இளைஞர்கள் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடும் ஒன்று தான பிட்சா, பர்கர், பிரெஞ்சு பிரைஸ் போன்றவை. இருப்பதிலேயே இவற்றை உட்கொண்டால், இதில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் மற்றும் உப்பு நீண்ட நேரம் பசியெடுக்காமல், வயிற்றை உப்புசத்துடன் வைத்துக் கொள்ளும்.

Related posts

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறதா பீன்ஸ்….?

nathan

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

nathan

வெற்றிலை கொதிக்க வைத்த தண்ணீரில் இத்தனை நன்மைகளா..?

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் கறிவேப்பிலை பொடி….

nathan

அப்படி என்ன ஸ்பெஷல்? நாட்டுக் கோழி சாப்பிடுவது ஏன் நல்லது என்று உங்களுக்கு தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலில் கொழுப்புகளை கரைக்கும் பாசிப்பயறு!…

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

nathan

கொழுப்பு குறைவாக உள்ள புடலங்காய்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்

nathan