பண்டிகைகள் என்றாலே முக்கிய இடம் பிடிப்பது உணவுகள்தானே? கேக்குகள் மற்றும் இனிப்புகள் இல்லாத கிறிஸ்துமஸ் அல்லது நெய் லட்டும் பர்பியும் இல்லாத தீபாவளி எங்காவது உண்டா?
இன்று உங்களுக்கு இந்த ஆப்பிள் பேரீச்சை கீர் பற்றி சொல்லப்போகிறோம். இதை செய்வதும் எளிது அதே நேரம் துர்கைக்கும் படைக்க முடியும்.
எனவே செய்யும் முறை மற்றும் தேவையான பொருட்கள் பற்றி தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
எத்தனை பேருக்கு? 2 பேர் தயார் செய்யும் நேரம் : 10 நிமிடங்கள் சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்: ஆப்பிள் : முக்கால் கப் (பொடியாக தோலுடன் நறுக்கியது) சர்க்கரை : ஒரு தேக்கரண்டி தண்ணீர் : ஒரு கப் கொழுப்பு நீக்கிய பால்: ஒரு கப் சோளமாவு: 2 தேக்கரண்டி பேரீச்சம்பழம்: கால் கப் பொடியாக நறுக்கியது இனிப்பூட்டி : 2 தேக்கரண்டி மேலே தூவ வால்நட் : பொடியாக நறுக்கியது சிறிதளவு
1. ஆழமான நான்ஸ்டிக் வாணலியில் ஆப்பிளை போட்டு அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். 2. சில நிமிடங்கள் ஆப்பிளை வேகவிடவும். பழம் என்பதால் சீக்கிரமே வெந்துவிடும். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. 3. சற்று மென்மையாக 5-7 நிமிடங்கள் வேகவிட்டு மசிந்துவிடாமல் கிளறி சற்று கடிக்கும் பதத்தில் இறக்கிவிடவும். இந்த பதம் சுவையைக் கூட்டும். 4. இப்போது மற்றொரு நான்ஸ்டிக் வாணலியில் அரை கப் பாலை ஊற்றிக் காய்ச்சி இறக்கி ஆறவிடவும். 5. அது ஆறியவுடன் அதில் சோளமாவை சேர்த்துக் கரைக்கவும். 6. வழக்கமாக கீர் செய்யும்போது செய்வதைப்போல் பாலை கொதிக்க விட வேண்டியதில்லை. ஒரு கொதி வந்தவுடன் அதில் சோளமாவை சேர்த்துக்கலக்க வேண்டும். 7. கட்டிகள் வராதவண்ணம் நன்றாகக் கிளறவேண்டும். 8. அடுத்து அதில் பேரீச்சம்பழத்தைப் போட்டு நன்றாக கிளறவும். பேரீச்சம்பழத்தை நன்றாகக் கடைந்துவிட்டால் அதன் மணமும சுவையும் பாலில் கலந்துவிடும். 9.மிதமான சூட்டில் 10 நிமிடங்களுக்கு இடைவிடாது கிளறவும். 10. இப்போது நெருப்பை அணைத்து கீர் நன்றாக ஆறும்வரை விடவும். 11. பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் எடுத்து ஆப்பிளை சேரத்து இனிப்பூட்டியையும் சேர்த்து நன்றாக கலக்கவும். 12. பின்னர் அதை ஒரு அழகான கிண்ணத்தில் ஊற்றி மேலே வால்நட் துகள்களைத் தூவவும் 13. இதனை குளிரூட்டி பரிமாறினால் சுவை சிறப்பாக இருக்கும் இதோ பேரீச்சம்பழம் ஆப்பிள் கீர் செய்ய நீங்கள் தயார். உங்கள் உறவினர் அல்லது நண்பர்களுக்கு சுகர் இருந்தாலும் தயக்கமின்றி இதை பருகலாம்.