21 61b57e
ஆரோக்கிய உணவு

தினமும் ஊற வைத்த பாதாமை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை உணவு எடுத்து கொள்வது மிகவும் அவசியம். காலை உணவை அனைத்து வயத்தினரும் தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும். அதுபோல காலை உணவில் பால், நட்ஸ், பழங்கள் போன்றவை எடுத்து கொள்வதால் உடலுக்கு தேவையான பல நன்மைகள் கிடைக்கின்றது.

மேலும் பாதம் பருப்பை இரவு முழுவதும் ஊறவைத்து சாப்பிடலாமா? என்பது பலருக்கு குழப்பமாகவே உள்ளது. இப்படி சாப்பிடுவதால் உடலுக்கு பலவித சத்துக்களை கொடுக்கின்றது. மேலும் பாதாமை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

நன்மைகள்:-

பாதாமில் மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இதனை அனைத்து வயதினரும் தினமும் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது அவற்றின் ஊட்டச்சத்துக்களை மிக சிறந்த முறையில் உறிஞ்சுவதற்கு நம் உடலுக்கு உதவுகிறது. ஊறவைத்த பாதாமை காலையில் சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனையை நீக்குகிறது.
ஊறவைத்த பாதாம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதால் நினைவாற்றலுக்கும் நல்லது. பாதாமில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி முடி மற்றும் சருமத்திற்கும் நல்லது. முடி ஆரோக்கியமாக வளரவும், சருமம் பொலிவாகவும் இருக்க தினமும் ஊறவைத்த பாதாமை சாப்பிடுங்கள்.

பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. ஊறவைத்த பாதாம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல் நிறைவாக வைத்திருக்கவும் உதவுகிறது.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் பருவதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்!!!

nathan

தங்கமான விட்டமின்

nathan

வேப்பம்பூ சாதம் செய்வது எப்படி?

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! உங்க எலும்புகளை இரும்பு போல் ஆக்க இந்த கீரை ஜூஸ் குடிங்க போதும்…!

nathan

பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புக்கள்

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! உயிருக்கே உலை வைக்கும் வெள்ளரிக்காய்!

nathan

கொழுப்பை குறைக்கும் வாழைப்பூ சீரகக் கஞ்சி

nathan

பீட்சாவில் சேர்க்கப்படும் பொருள் இவ்வளவு ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெங்காயம் உரிக்கும் போது இதை செய்தால் கண்ணீரே வராதாம்!

nathan