26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
shutterstock 196140077 18392 11424
ஆரோக்கிய உணவு

தசைகளுக்கு வலிமை தரும் 10 இயற்கை உணவுகள்!

உடலை வலிமையாகவும் கவர்ச்சியாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது இளைஞர்கள் பலரின் ஆசை, கனவாக இருக்கிறது. இதற்காகவே உடற்பயிற்சிக்கூடங்களை நோக்கி படையெடுக்கின்றனர். சிலர் நேரம் காலம் பார்க்காமல் வியர்க்க விறுவிறுக்க… கடும் சிரத்தையோடு உடற்பயிற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சிகள் ஒருபுறமிருக்க உடல் வலிமையாக வேண்டுமென்றால், உடல் தசைகள் மேம்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், இங்கே நடப்பதே வேறு. அதாவது, இயற்கை உணவில் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் நிறைய இருக்க, டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்ட புரோட்டின் பவுடர், எனர்ஜி ஃபுட் போன்ற செயற்கை ஊட்டச்சத்துகளைத்தான் நம்மில் பலர் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, ` தசைகளுக்கு வலிமை சேர்க்க, `நாம் சாப்பிடும் உணவுகள் வலிமையான தசைகளைப் பெற துணைப்புரிகின்றது அதுவே ஆரோக்கியமானதும் கூட’, என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

உடல் தசைகள்

மேலும், `இயற்கையாகக் கிடைக்கும் உணவைச் சாப்பிடும்போது, புரதச் சத்துடன் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இவை உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலு சேர்க்கும். ஆனால், செயற்கை உணவை உட்கொள்ளும்போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் முழுமையாக கிடைக்காது’ என்கிறார்கள்.

செயற்கை உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானமாக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், உடனடியாக வேறு உணவுகளை நாம் சாப்பிட முடியாது. எனவே, உடலை வலிமையாக்க விரும்புவர்களும், கடின உடற்பயிற்சி மேற்கொள்பவர்களும் எந்தெந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்…

முட்டை

உணவுகள்

நாம் சாப்பிடும் ஒவ்வொரு முட்டையிலிருந்தும் 6-ல் இருந்து 8 கிராம் வரையிலான புரதச் சத்து (புரோட்டின்) கிடைக்கிறது. 9-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் முட்டையில் வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுசத்துகளும் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் உடல் வலுப்பெற உதவுகிறது.

இறைச்சி

100 கிராம் கோழி இறைச்சியில் (கோழியின் நெஞ்சுப்பகுதி) 30 கிராம் புரதச்சத்து உள்ளது. இவை செல்களின் தேய்மானத்தைக் குறைத்து புதுப்பிக்க உதவுவதோடு, இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது.

தண்ணீர்

நம் உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அதேபோல, தசை திசுக்கள் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனதாகும். எனவே தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது தசையின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இல்லையென்றால் நீர்வறட்சி ஏற்படும். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்பால் தசை வலிமை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தசையின் வலிமைக்கு உதவும்.

மீன் எண்ணெய்

மீன் எண்ணெயில் தசை வளர்ச்சிக்குத் தேவையான ஆன்டி-இன்ப்ளாமிட்டரி (anti-inflammatory) அதிக அளவில் உள்ளது. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolism) ஊக்குவிக்கும். இதனால் உடலின் தேவையில்லாத கொழுப்புகள் குறைவதோடு, வலிமையான தசைகள் உருவாக உதவும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதச்சத்து, தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடற்பயிற்சி செய்ததும் எடுத்துக் கொள்ள வேண்டிய சிறந்த உணவாகும் இது.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் உள்ள பைட்டோசிடை ஸ்டீராய்டு (Phytoecdysteroids) என்ற வேதிப்பொருள் 20 சதவிகித தசை வளர்ச்சிக்கு உதவுவதாக, அமெரிக்காவில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் (Pineapple) ப்ரோமெலைன் (Bromelein) என்னும் என்சைம் உள்ளது. இது தசைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதுடன், தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு இதைச் சாப்பிடுவது நல்லது.

வாழைப்பழம்

வாழைப் பழம்

வாழைப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் (Bromelein) ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும். உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமானால், அது தசை வளர்ச்சிக்கு உதவும்.

புரோக்கோலி

புரோக்கோலியுடன் தக்காளி, மக்காச்சோளம், மிளகு சேர்த்து சாலட்டாகச் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின்-சி தசை திசுக்களின் ஆயுளை கூட்டும். நார்ச்சத்து, தாதுச்சத்துகளும் இதில் அதிகளவு உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கு உதவும்.

பாதாம்

பாதாம்பருப்பில் கொழுப்புச்சத்து, புரதம், வைட்டமின்-இ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைவாக உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கு ஊட்டமளிப்பதோடு, வலிமைபெறவும் பெரிதும் உதவுகின்றன. shutterstock 196140077 18392 11424

Related posts

குழந்தைகளுக்கும், கருவுற்ற தாய்மார்களும் பச்சை பட்டாணியை சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்த.. தினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் சோம்பல், வாய் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவ குணம் கொண்ட மிளகு

nathan

ஹஜ் பெருநாள் ஸ்பெஷல்:சுவையான மட்டன் ‘தம்’ பிரியாணி செய்முறை!

nathan

உடல் எடையினால் அவதிப்படுகிறீர்களா?

nathan

தெரிஞ்சிக்கங்க…30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

குழந்தை பிறந்த உடன் நீங்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

nathan

சூப்பர் டிப்ஸ்! சப்பாத்திக்கு ஹோட்டல் ஸ்டைலில் வெஜ் குருமா செய்வது எப்படி ?

nathan