தமிழர்களின் பொருளான உணவுகளில் ஏலக்காய் சேர்த்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.
இது சுவைக்காகவும், வாசனைக்காகவும் பயன்படுத்துவதாகவே எம்மில் பலரும் கருதுகின்றோம்.
ஆனால் அதையும் தாண்டி பல விதமாக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
இன்று ஏலாக்காயினை நீரிழிவு நோயாளிகள் எடுத்து கொண்டால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகளில் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஏலக்காய் மிகவும் சிறந்தது. இது, இதய பிரச்சனை மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
அதேபோல், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஏலக்காயை ஏதேனும் ஒரு வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.
வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தவும், வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும், பல் மற்றும் ஈறு சம்மந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் ஏலக்காய் உதவுகிறது.
எனவே தினமும் அளவாக உணவில் ஏலக்காய் எடுத்து கொள்ளுங்கள். ஏலக்காய் டீ போட்டு குடித்தாலும் அதே நன்மையை பெற்று கொள்ள முடியும்.
ஏலக்காய் டீ தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
டீ தூள் – 2 டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை – 2 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
பால் – ஒரு கப்
செய்முறை
ஏலக்காயை தட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
நன்கு கொதித்து வரும் போது அதில், தேயிலை, தட்டிய ஏலக்காய் சேர்க்கவும். டிகாக்ஷன் இறங்கியதும், வடிகட்டி நாட்டுச்சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.
சூப்பரான ஏலக்காய் டீ ரெடி.