26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
27
சிற்றுண்டி வகைகள்

சோயா சன்க்ஸ் சாண்ட்விச்

என்னென்ன தேவை?

சோயா சன்க்ஸ் ஸ்டஃபிங்குக்கு…

சோயா சன்க்ஸ் – 1 கப்,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
குடை மிளகாய் – 1,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிது,
உப்பு – தேவைக்கேற்ப.

இதரப் பொருட்கள்…

பிரெட் – 4,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1.

எப்படிச் செய்வது?

சோயா சன்க்ஸை கொதிக்கும் நீரில் போட்டு மிருதுவானவுடன் பிழிந்தெடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, நன்கு உதிர்த்த சோயா சன்க்ஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். கொத்தமல்லித்தழை தூவி நன்கு ஆற விடவும். பிரெட்டினுள்ளே சோயா ஸ்டஃபிங்கை வைத்து எண்ணெய் தடவிய தோசைக் கல்லில் பொன்னிறமாகும் வரை போட்டு எடுக்கவும். வெண்ணெய் மற்றும் பச்சை மிளகாயை மேலே அலங்கரித்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்
27

Related posts

சூப்பரான கடலைப்பருப்பு சுண்டல்

nathan

உப்பு அதிகரித்துவிட்டால்

nathan

ரோஸ் லட்டு

nathan

பச்சை பட்டாணி கச்சோரி

nathan

குழந்தைகளுக்கான கேரமல் பிரை பனானா

nathan

பீட்ரூட் ராகி தோசை செய்முறை விளக்கம்

nathan

மெது போண்டா செய்வது எப்படி

nathan

வெந்தய தயிர் பச்சடி

nathan

தீபாவளி ஸ்பெஷல் முந்திரி – பாதாம் ரோல்

nathan