26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
tomato curry
செட்டிநாட்டுச் சமையல்

சூப்பரான செட்டிநாடு தக்காளி குழம்பு

இதுவரை எத்தனையோ ஸ்டைலில் தக்காளி குழம்பு செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் செட்டிநாடு ஸ்டைலில் தக்காளி குழம்பு செய்து சுவைத்ததுண்டா? ஆம் செட்டிநாடு ஸ்டைல் தக்காளி குழம்பு மிகவும் சுவையாகவும், செய்தவற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.

சரி, இப்போது செட்டிநாடு ஸ்டைல் தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Chettinad Tomato Kuzhambu
தேவையான பொருட்கள்:

தக்காளி – 3-4 (பெரியது மற்றும் நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு…

சின்ன வெங்காயம் – 1/2 கப்
தேங்காய் – 3/4 கப்
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2-3
எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலிடிய அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொட்டுக்கடலை, மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் சேர்த்து கிளறி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தக்காளியை சேர்த்து, அதில் உப்பு தூவி, 10 நிமிடம் நன்கு வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்க வேண்டும்.

இறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி கிளறிவிட்டால், சுவையான செட்டிநாடு தக்காளி குழம்பு ரெடி!!!

Related posts

செட்டிநாடு இறால் குழம்பு!

nathan

செட்டிநாட்டு பட்டாணி மசாலாப் பொரியல்

nathan

செட்டிநாடு கோழி குழம்பு

nathan

சுவையான செட்டிநாடு இறால் குழம்பு

nathan

செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி

nathan

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை

nathan

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

nathan

செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்

nathan

செட்டிநாடு பால் பணியாரம்

nathan