26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
cowpea curry
சமையல் குறிப்புகள்

சுவையான… தட்டைப்பயறு குழம்பு

பொதுவாக பயறு வகைகளைக் கொண்டு செய்யப்படும் குழம்புகள் அனைத்துமே மிகவும் சுவையுடன், அருமையாக இருக்கும். அதிலும் தட்டைப்பயறு குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம். அதனை சமைக்கும் போதே, பலருக்கு அதன் நறுமணத்தால் பசியானது அதிகரித்துவிடும். அந்த அளவில் தட்டைப்பயறு குழம்பானது ருசியாக இருக்கும்.

எனவே இன்று என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தால், தட்டைப்பயறு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இங்கு அந்த தட்டைப்பயறு குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Thattapayir Kuzhambu Recipe
தேவையான பொருட்கள்:

தட்டைப்பயறு – 1 கப்
புளிச்சாறு – 1/4 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான பொருட்கள்

தாளிப்பதற்கு…

பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 5
கறிவேப்பிலை – சிறிது
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

தேங்காய் – 1/4 கப்
தக்காளி – 1
பெரிய வெங்காயம் – 1/2
சோம்பு – 1/2 டீஸ்பூன்
வேக வைத்த தட்டைப்பயறு – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தட்டைப்பயறு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் அதனை இறக்கி குளிர வைத்து, நீரில் இரண்டு முறை அலசி, குக்கரில் போட்டு, போதிய அளவு தண்ணீர் ஊற்றி, 5-6 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, 1/2 வெங்காயம் மற்றும் 1 தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின் அதில் அரைப்பதற்கு கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து வதக்கி, இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது வேக வைத்த தட்டைப்பயறு சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதனை குக்கரில் உள்ள தட்டைப்பயறில் சேர்த்து, 3/4 கப் தண்ணீர், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அதில் புளிச்சாறு மற்றும் குழம்பு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், தட்டைப்பயறு குழம்பு ரெடி!!!

Related posts

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு பிரெட் போண்டா!…

sangika

அரைக்கீரைவைத்து சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி?

sangika

ஆரோக்கியமான ராகி தோசை

nathan

பொரி அல்வா

nathan

பட்டாணி கிரேவி

nathan

சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

nathan

என்னென்ன காய்கறி எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?

nathan

சுவையான காளான் மஞ்சூரியன்

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

nathan