24 C
Chennai
Thursday, Dec 19, 2024
capsicumpeanutchutney
சமையல் குறிப்புகள்

சுவையான குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி

இன்று உங்கள் வீட்டில் இட்லி? இந்த இட்லிக்கு  மிகவும் சுவையான சட்னி செய்ய வேண்டுமா?, குடைமிளகாய் கடலை சட்னி செய்யவும். மிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

தமிழ் மிளகு வேர்க்கடலை சட்னி செய்முறை
குடைமிளகாய் கடலை சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? குடைமிளகாய் கடலை சட்னிக்கான எளிய செய்முறை கீழே உள்ளது. படித்து, சுவைத்து, உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* குடைமிளகாய் – 1/2 கப் (நறுக்கியது)

* வேர்க்கடலை – 1/4 கப்

* பச்சை மிளகாய் – 3-4

* பூண்டு – 1 பெரிய பல்

* புளி – சிறிது

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

* கடுகு – 1/4 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலை மற்றும் பச்சை மிளாகய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்னர் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் கொத்தமல்லி, பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அரைத்த சட்னியை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு சிறிது வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி தயார்.

Related posts

சமையல் குறிப்புகள்! சமையலில் கலக்க…

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால்

nathan

காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி இரகசியம் இதுதான் !!!

nathan

மணமணக்கும்.. மணத்தக்காளி வத்தக் குழம்பு

nathan

சுண்டைக்காய் மகத்துவம்..!

nathan

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika

முருங்கைக்கீரை புலாவ் ரெடி….

sangika

சுவையான பீர்க்கங்காய் வேர்க்கடலை தொக்கு

nathan

அரிசி மாவில் காய்கறிரொட்டி செய்முறை…..

sangika